கறிக்கோழி விலை கிடு கிடு ஒரே மாதத்தில் கிலோவுக்கு ரூ.50 உயர்வுகறிக்கோழி விலை கிடு கிடு ஒரே மாதத்தில் கிலோவுக்கு ரூ.50 உயர்வு ... ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு தங்கம் விலை சரிவு ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு தங்கம் விலை சரிவு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
டாடா சபாரி ஸ்டார்ம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 பிப்
2013
14:20

இந்தியாவின் முதல் எஸ்யுவியாக அறிமுகப்படுத்தப்பட்டு கம்பீரமா# சாலைகளில் வலம் வந்து கொண்டிருந்த டாடா சபாரி தற்பொழுது மேம்படுத்தப்பட்ட செயல்திறன், நவீன தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் சிறந்த வசதிகளுடன் பிரமிப்பான கம்பீரத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டாடா சபாரி ஸ்டார்ம் என்ற பெயரில் டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ள இந்த எஸ்யுவி பிரம்மாண்டமான தோற்றம் மற்றும் செயல்திறன்களை கொண்டுள்ளது. சரிவான மலைப்பாதையோ, கரடு முரடான கிராமத்து சாலையோ, மணற்பரப்புள்ள கடலோர பாதையோ, குண்டும் குழியுமான சாலையோ, போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரச்சாலையோ, எதுவாகினும் எந்த சிரமமின்றி பயணிகளுக்கு எந்த அசெளகரியங்களும் ஏற்படாவண்ணம் மிக நேர்த்தியான செயல்திறனுடன் மிகப்பாதுகாப்பாகவும், சொகுசாகவும் பயணம் அமைய வழிவகுக்கிறது டாடா சபாரி ஸ்டார்ம்.
உறுதியான கட்டுமானம் கொண்ட ஸ்டார்மில் ‌மேம்படுத்தப்பட்ட ஹைட்ரோ பார்ம்டு மெம்பர்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகமான உறுதியும் அதே நேரம் குறைவான எடையையும் வாகனத்திற்கு வழங்குகிறது. இதன் 2.2 லிட்டர் வேர்கோர் என்ஜின் விடிடி டர்போ சார்ஜுடன் இருக்கிறது. இது 140ககு பவரையும் 320 NM டார்க்கையும் வழங்குகிறது. ஓட்டுவதற்கு எளிதாக, சப்தம் குறைவாகவும், வேக மாற்றங்கள் தெரியா வண்ணமும், அதிர்வு இன்றியும் சுகமான பயணத்தையும் ஓட்டும் அனுபவத்தையும் வழங்குகிறது. சபாரி ஸ்டார்ம். இதன் இஎஸ்ஓஎப் (எலக்ட்ரானிக் ஷப்ட் ஆன் பிளை) தொழில்நுட்பம் இருப்பதால் டூவீல் டிரைவில் வண்டி சென்று கொண்டிருக்கும் போதே பாதை கடினமாக இருந்தால் போர் வீல் டிரைவிற்கு
சுலபமாக மாற்றிக்கொள்ளலாம். மேலும் இதன் டபுள் விஷ்போன் சஸ்பென்ஷன் ஏற்றக்குறைவான பாதைகளில் சென்றுகொண்டிருந்தாலும் வண்டியில் உள்ளவர்களை எந்த வகையிலும் பாதிக்காமல் அதிர்வை முழுவதுமாய் உள்வாங்கிக் கொள்கிறது. 15 வினாடிகளில் 0-100 கிலோமீட்டர் வேகத்தை தொடுவதும், திருப்பும் வட்டத்திற்கான விட்டம் 5.4 மீட்டர் என்பது குறுகிய வளைவுகளில் கூட எளிதாக திரும்ப வழிவகுப்பதும், ராக் அண்ட் பினியன் ஸ்டியரிங் சிஸ்டம் வண்டியை துல்லியமாக இயக்க உதவுவதும், 200 எம்எம் கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் 26 டிகிரி கிரெடிபிலிட்டி உள்ளதும் இதன் சிறப்பான செயல்திறனுக்கானஅம்சங்களாகும்.
சபாரி ஸ்டார்ம் தோற்றத்தில் மிகவும் பிரம்மாண்டமாக தோன்றுவதுடன், முன்புற கிரில், சைட் கிளாடிங், புரொஜக்டர் முகப்பு விளக்குகள் மற்றும் பவர் பல்ஜ் கொண்ட பானட் போன்றவை புதிதாய் வடிவமைக்கப்பட்டு மிகச்சிறந்த பொலிவை இந்த எஸ்யுவிக்கு வழங்குகிறது. நல்ல விசாலமான இடவசதியுடன் முன் மற்றும் பின்புற இருக்கைகள் இருப்பதால் குடும்பத்துடன் நீண்ட தூர பயணம் செய்ய சிறந்ததாக ஸ்டார்ம் விளங்குகிறது. ஏழு சீட்கள் கொண்ட இந்த எஸ்யுவியில் கடைசி இரண்டு பின்பக்க சீட்களை மடித்து விட்டால் பொருட்களை வைக்க கூடுதல் இடம் கிடைக்கும். மேலும் இதன் இரண்டாவது அடுக்கு சீட்களையும் மடித்து விட்டால் படுத்துக் கொண்டு செல்லவும் முடியும் என்பது இதன் மற்றொருசிறப்பாகும். இதன் ஒருக்கிணைந்த ரூப் மவுண்டட் பிளோயர்களுடன் உள்ள இரட்டை ஏசி, சீரான குளிர்ச்சியை வாகனம் முழுவதற்கும் வழங்குகிறது. இன்மோல்ட் தொழில்நுட்பம் ஒருங்கிணைந்த லெதர் ஸ்டியரிங், உயர்தர தோற்றம் கொண்ட கியர் நாப்கள், டாஷ்போர்ட்,
கதவுகள், ஸ்பீக்கர், கதவின் கைப்பிடிகள், சீட்கள் போன்றவை இதன்உட்புற தோற்றத்தை பிரமிப்பாக்குகிறது.
இதன் சுதந்திரமாய் இயங்கும் ஹைட்ராலிக் வென்டிலேட்டர் டிஸ்க் பிரேக்குகள், 4 சேனல் ஏபிஎஸ், அவசர உதவி தேவைப்படும் நேரத்தில் இனெர்சியா சுவிட்ச் இன்ஜினுக்கு எரிபொருள் செல்வதை தடுத்து, கதவுகளை திறந்து எச்சரிக்கை விளக்கை எரியச் செய்து சாலையில் செல்ல மற்றவர்களை எச்சரிப்பது, கூச்சம் ஏற்படுத்தாத அதிக வெளிச்சம் தரும் பிஇஎஸ் முகப்பு விளக்கு, என்ஜின் இம்மொபலைசர் போன்றவை சபாரி ஸ்டார்ம்மின் பயணத்தை மிகவும் பாதுகாப்பாக அமைக்கிறது. டூவீல் டிரைவிற்கு லிட்டருக்கு 14 கிலோமீட்டரும், போர்வீல் டிரைவிற்கு லிட்டருக்கு 13.2 கிலோ மீட்டரும் மைலேஜ் தருகிறது என்பது சபாரி ஸ்டார்மின் சிறப்பம்சமாகும். சபாரி ஸ்டார்ம் ரூ. 9.95 லட்சத்திலிருந்து இதன் விலை வேரியன்டிற்கு (எல்எக்ஸ், இஎக்ஸ், விஎக்ஸ்) ஏற்ப தொடங்குகிறது. (சென்னை ஷோரூம் விலை). ஏழு விதமான நிறங்களில் கிடைக்கும் ஸ்டார்ம் 3 ஆண்டு உத்தரவாதம் அல்லது 1 லட்சம் கிலோமீட்டர் மற்றும் விரிவுபடுத்தப்பட்ட 4 ஆண்டுகள் உத்தரவாதம் அல்லது 1.5 லட்சம் கிலோமீட்டர் என்ற உத்தரவாதத்துடன் வருகிறது. சாகச பயணமோ, நீண்ட தூர குடும்பப் பயணமோ, சொகுசாய் பயணிக்க விரும்பும் நகரப்பயணமோ எதுவாகிலும் உரிமையாளரை பெருமிதம் கொள்ளச் செய்யும் வண்ணம் பிரம்மாண்ட அழகு மற்றும் செயல்திறனுடன் வந்துள்ளது புதிய சபாரி ஸ்டார்ம்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)