பதிவு செய்த நாள்
04 பிப்2013
17:03
புதுடில்லி : கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் தங்கத்தின் விலை சரிந்துள்ளது. உலகளவில் அதிக தங்கம் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. அந்தளவுக்கு தங்கத்தின் மீதான மோகம் இந்திய மக்களிடத்தில் இருக்கிறது. தங்கம் விலை உயர்ந்தாலும் மக்கள் அதிகளவில் தங்கத்தை வாங்கி தான் வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தியது. இதன்வெளிப்பாடாக தங்கம் விலை கடந்தவாரம் உயர்ந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. 10கிராம் தங்கத்தின் விலை இன்று(04.02.13) ரூ.30,350-க்கு விற்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இதே 10கிராம் தங்கத்தின் விலை ரூ.30,487-க்கு விற்பனையானது. அதன்பிறகு கடந்த 5 மாதங்களுக்கு பிறகு தற்போது தான் தங்கம் விலை இந்தளவு குறைந்துள்ளது.
சென்னையில் மாலைநேர நிலவரப்படி ஒருகிராம் தங்கத்தின் விலை ரூ.2,838-க்கும், 24காரட் சுத்த தங்கத்தின் விலை(10கிராம்) ரூ.30,350-க்கும் விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை கிராம் ஒன்று ரூ.62.20-க்கும், பார்வெள்ளியின் விலை கிலோ ரூ.58,135-க்கும் விற்பனையானது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|