தங்கம் விலையில் மாற்றமில்லைதங்கம் விலையில் மாற்றமில்லை ... நாட்டின் அன்னிய செலாவணிகையிருப்பு ரூ.3,300 கோடி குறைவு நாட்டின் அன்னிய செலாவணிகையிருப்பு ரூ.3,300 கோடி குறைவு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
ஸ்டைலான சிறிய ரக டீசல் கார்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 பிப்
2013
14:42

சிறிய கார் வேண்டுவோருக்கு மிக ஸ்டைலான வடிவமைப்பில் டீசல் கார்கள் உள்ளன. இவை நகரங்களில் ஓட்டி செல்வதற்கு ஏற்ற வகையில் அனைத்து சிறப்பு அம்சங்களுடன் நமக்கு ஏற்ற விலையில் உள்ளன. பெரியரக கார்களின் ஸ்டைலான தோற்றத்தை சிறிய ரக கார்களுக்கு ஏற்ற வகையில், மிக சிறப்பான டீசல் கார்கள் அறிமுகமாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. சிறிய ரக கார்கள் பார்கிங் செய்வதற்கும் நகரதின் நெருக்கடி மிகுந்த சாலைகளில் சிறப்பான முறையில்ஓட்டி செல்லவும் உதவிபுரிகின்றன. மேலும் டீசல் உபயோகப்படுத்தும் கார்கள் அதிக ஸ்டைலுடன் சிறப்பான விலையில் கிடைக்கும் போது அதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
மாருதி சூசுகி Swift VDI BSIV
சிறிய ரக டீசல் கார்களில் மிக சிறப்பான வடிவமைப்புடன் தோற்றமளிக்கும் மாருதி சூசுகியின் Swift VDI BSIVயின் விலை ரூ.7லட்சம் என்றளவில் உள்ளது. இது ஓட்டுவதற்கு மிக சிறப்பாகவும், இனிமையாகவும் உள்ளது. இதன் 1248 CC டீசல் இன்ஜின் அமைதியான பயணத்திற்கு உத்தரவாதம் தருகிறது. வெளிபுற தோற்றம் மிக அழகாகவும் உட்புற அழகும் மிக நேர்த்தியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதால் சிறந்த விலையில் சிறப்பான தோற்றத்துடன் டீசல் கார் எனும் போது சூசுகியின் Swift VDI BSIV தனி இடம் பிடிக்கிறது.
மாருதி Swift ZDI
இது டீசல் வகை கார்களில் அதிக மைலேஜ் தரும் கார். நெடுஞ்சாலையில் இதன் மைலேஜ் 22.9 Kmpl என்றவாறு உள்ளது. எரிபொருள் சிக்கனம் மற்றும் சுற்றுசூழல் நண்பன் என்ற சிறப்பு அந்தஸ்து பெற்றுள்ளது. 7 நிறங்களில் நல்ல தோற்றத்தில் கிடைக்கும் இவை விலை சற்று கூடுதல். ஆனால் அதற்கேற்ற செயல்திறன் உள்ளது. என்ஜின் அலுமினியம் பெட்பிளேட் மூலம் தயாரித்துள்ளதால் அதிக இரைச்சல் மற்றும் அதிர்வு தெரியாது.
ரினால்ட் பல்ஸ் RXL Diesel
சிறிய ரக கார்களில் டீசல் ரகத்தில் சிறந்த காராக திகழ்வது ரினால்ட் பல்ஸ் RXL Diesel தான். இதன் மைலேஜ் மற்றும் எரிபொருள் சிக்கனம் சிறப்பாக உள்ளது. டீசல் இன்ஜின் சிறந்த திறன் கொண்டது. நகர சாலைகளில் செல்லும்போது தனித்து நிற்கும் சிறப்பு வடிவமைப்போடு நெருக்கடியின் போது சிறப்பான பிரேகிங் சிஸ்டம் கொண்டதாக உள்ளது. நமக்கு தேவையான நிறங்களில் சிறப்பான விலையில் ரினால்ட் பல்ஸ் RXL கிடைக்கிறது.
ஹூண்டாய் டி20 1.4 Era
1.4 லிட்டர் CRDI இன்ஜின் 2டன் 6 ஸ்பீடு கியர் மாற்றும் தன்மை கொண்ட டீசல் காராக ஹூண்டாயின் டி20 1.4 Era விளங்குகிறது. சென்ட்ரல் லாகிங், பவர் ஸ்டியரிங், மடிக்கும் தன்மை அழகான சீட்கள் போன்றவை சிறந்து விளங்குகின்றன. இதன் மைலேஜ் 21.9kmpl என்றவாறு உள்ளது.
வால்ஸ்வோகன் போலோ
போலோ ஹைலைன், டீமல் சிறந்த வகையாக விளங்குகிறது. இது ஓட்டுவதற்கு சிறப்பாகவும் மைலேஜ் நன்றாக உள்ளது. சீட் அமர்வதற்கு தாராள இடவசதியோடு நமது சாலைக்கு ஏற்ற சிறப்பான பயணத்தை போலோ High Line முதன்மையாக விளங்குகிறது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)