பதிவு செய்த நாள்
10 பிப்2013
00:10

மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, சென்ற 1ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 60 கோடி டாலர் (3,300 கோடி ரூபாய்) குறைந்து, 29,515 கோடி டாலராக (16.23 லட்சம் கோடி ரூபாய்) குறைந்துள்ளது.இது, இதற்கு முந்தைய, ஜனவரி 25ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 29,575 கோடி டாலராக (16.26 லட்சம் கோடி ரூபாய்) அதிகரித்து காணப்பட்டது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே வாரத்தில், அன்னியச் செலாவணிகளின் சொத்து மதிப்பு, 26,132 கோடி டாலர் என்ற அளவிலும், கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு, 2,697 கோடி டாலர் என்ற அளவிலும் உள்ளன.எஸ்.டீ.ஆர்., மதிப்பு, 445 கோடி டாலர் என்ற அளவிலும், சர்வதேச நிதியத்தில், நம் நாடு வைத்துள்ள செலாவணிகளின் மதிப்பு, 239 கோடி டாலர் என்ற அளவிலும் உள்ளன.அமெரிக்க டாலருக்கு எதிரான யூரோ, ஸ்டெர்லிங், யென் உள்ளிட்ட இதர நாட்டுச் செலாவணிகளில் ஏற்பட்ட மாறுபாட்டால், கையிருப்பில் உள்ள அன்னியச் செலாவணி மதிப்பு குறைந்துள்ளதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்




|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|