பதிவு செய்த நாள்
10 பிப்2013
00:14

புதுடில்லி:நடப்பாண்டு ஜனவரி மாதத்தில், நாட்டின், தரைவிரிப்புகள் ஏற்றுமதி, 7.54 கோடி டாலராக (415 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது. இது, சென்ற ஆண்டின், இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை (7.05 கோடி டாலர்/388 கோடி ரூபாய்) விட, 7 சதவீதம் அதிகமாகும் என, தரைவிரிப்பு ஏற்றுமதி மேம்பாட்டு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
வேலைவாய்ப்பு:உள்நாட்டில், தரைவிரிப்பு தொழிலில், 25 லட்சத்துக்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இந்திய தரைவிரிப்பு களுக்கு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் முக்கியச் சந்தைகளாகத் திகழ்கின்றன. நாட்டின், மொத்த தரைவிரிப்பு ஏற்றுமதியில், மேற்கண்ட நாடுகளின் பங்களிப்பு, 60 சதவீதம் என்ற அளவில் உள்ளது.சர்வதேச பொருளாதார சுணக்க நிலையால், மேற்கண்ட நாடுகளுக்கான தரைவிரிப்பு ஏற்றுமதி குறைந்து போயுள்ளது.
இந்நிலையில், சென்ற ஜனவரி மாதத்தில், புதிய சந்தைகளாக கண்டறியப்பட்டுள்ள லத்தீன் அமெரிக்கா, ஆப்ரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கு, தரைவிரிப்புகள் அதிக அளவில் ஏற்றுமதியாகியுள்ளன.நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான, 10 மாத காலத்தில், தரைவிரிப்பு ஏற்றுமதி, சென்ற நிதியாண்டின், இதே காலத்தை விட, 7 சதவீதம் உயர்ந்து, 81 கோடி டாலராக (4,455 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது.
கைத்தறி:சென்ற ஜனவரியில், கைத்தறி பட்டு தரைவிரிப்பு ஏற்றுமதி, 21 சதவீதமும், கம்பளி தரைவிரிப்பு ஏற்றுமதி, 11 சத வீதமும், செயற்கை தரைவிரிப்பு, 5 சதவீதமும் அதிகரித்துள்ளன.நடப்பு நிதியாண்டில், தரைவிரிப்பு ஏற்றுமதி, 100 கோடி டாலரை (5,500 கோடி ரூபாய்) எட்டும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இது, சென்ற நிதியாண்டில், 81 கோடி டாலர் (4,455 கோடி ரூபாய்) என்ற அளவில் இருந்தது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|