பதிவு செய்த நாள்
13 பிப்2013
10:40
புதிய சிஆர்வி பிரிமியம் எஸ்யூவியை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது ஹோண்டா கார் நிறுவனம். 2.0 லிட்டர் மற்றும் 2.2 லிட்டர் ஆகிய இரண்டு பெட்ரோல் எஞ்சின் மாடல்களில் 4 வேரியண்ட்களில் புதிய சிஆர்வி கிடைக்கும். 2.4 லிட்டர் எஞ்சின் பெட்ரோல் மாடல் 4 வீல் டிரைவ் சிஸ்டத்தையும், 2.0 லிட்டர் எஞ்சின் கொண்ட பெட்ரோல் மாடல் 2 வீல் டிரைவ் சிஸ்டத்தையும் கொண்டிருக்கும். ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மாடல்களில் கிடைக்கும். மேனுவல் டிரான்ஸ்மிஷன் மாடலில் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இதுதவிர, எலக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங், 6 ஸ்பீக்கர்கள் கொண்ட மியூசிக் சிஸ்டம், 6.1 இஞ்ச் டச் ஸ்கிரீன் ஆகியவை ஸ்டான்டர்டு அம்சங்கள். ஏபிஎஸ், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், டூயல் எஸ்ஆர்எஸ் ஏர்பேக்ஸ் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டிருக்கும். 2.0 லிட்டர் எம்டி ரூ.19.95 லட்சத்திற்கும் 2.0 லிட்டர் ஏடி ரூ.20.85 லட்சத்திற்கும் 2.4 லிட்டர் ஏடி ரூ.22.40 லட்சத்திற்கும் 2.0 லிட்டர் ஏடி+ஏவிஎன் ரூ.23.85 லட்சத்திற்கும் (ஏவிஎன்-ஆடியோ, வீடியோ, நேவிகேஷன்) கிடைக்கிறது.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|