பதிவு செய்த நாள்
14 பிப்2013
00:26

மும்பை:நடப்பு ரபி பருவத்தில், நாட்டின், கடுகு உற்பத்தி, 71 லட்சம் டன்னாக அதிகரிக்கும் என, இந்திய எண்ணெய் உற்பத்தியாளர் கூட்டமைப்பு மதிப்பிட்டுள்ளது.
உள்நாட்டில், குஜராத், ஹரியானா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில், அதிக அளவில் கடுகு உற்பத்தி செய்யப்படுகிறது.நடப்பு பருவத்தில், கடுகு பயிர் பரப்பளவு, 64 லட்சம் ஹெக்டேர் என்ற அளவில் உள்ளது. இது, முந்தைய பருவத்தில், 66 லட்சம் ஹெக்டேராக இருந்தது.கடந்த பருவத்தில், ஒரு ஹெக்டேரில், சராசரி கடுகு உற்பத்தி, 893 கிலோ என்ற அளவில் இருந்தது.நடப்பு பருவத்தில், கடுகு உற்பத்தி, கடந்த பருவத்தை விட, 23.5 சதவீதம் உயர்ந்து, 1,103
கிலோவாக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.நடப்பு ரபி பருவத்தில், நாட்டின், கடுகு உற்பத்தி, 71 லட்சம் டன்னாக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. இது, கடந்த பருவத்தின், இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை (59 லட்சம் டன்) விட, 21 சதவீதம் அதிகமாகும்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|