பதிவு செய்த நாள்
14 பிப்2013
00:30

மும்பை:சென்ற டிசம்பர் மாதம் வரையிலுமாக, லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (எல்.ஐ.சி.,) நிறுவனம், மேற்கொண்ட முதலீடு, 14.80 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. இது, கடந்த ஆண்டு, மார்ச் மாதம் வரையிலுமாக இருந்த முதலீட்டை (13.49 லட்சம் கோடி ரூபாய்) விட, 17 சதவீதம் அதிகமாகும்.எல்.ஐ.சி., கடந்த டிசம்பர் மாதம் வரையிலுமாக, அரசு கடன் பத்திரங்களில் மேற்கொண்ட முதலீடு, 7.27 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது. இதில், மத்திய அரசின் கடன் பத்திரங்களின் பங்களிப்பு, 4.77 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது. மீதி தொகை, மாநில அரசுகளின் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
குடியிருப்பு மற்றும் அடிப்படை கட்டுமான துறைகளில் மேற்கொண்ட முதலீடு, 1.91 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது. இதில், மின் துறையை சேர்ந்த, அடிப்படை கட்டுமான துறையின் பங்களிப்பு, 94,294 கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது. இதையடுத்து, நீர்ப்பாசனம், நெடுஞ்சாலை, துறைமுகம், மேம்பாலம், தொலைத்தொடர்பு ஆகிய துறைகள் உள்ளன.எல்.ஐ.சி., நடப்பு நிதியாண்டில், அரசு கடன் பத்திரங்கள், நிறுவன பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களில், 2.40 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தது. இதையடுத்து, வரும் 2020ம் ஆண்டில், இதன் தொகுப்பு நிதி, 32 லட்சம் கோடி ரூபாயை எட்டும் என, இந்நிறுவனத்தின் தலைவர் டி.கே.மல்கோத்ரா அண்மையில் தெரிவித்திருந்தார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|