பதிவு செய்த நாள்
14 பிப்2013
08:39

புதுடில்லி : பெட்ரோல் விலையை, லிட்டருக்கு, 1 ரூபாயும், டீசல் விலையை, லிட்டருக்கு, 50 காசுகளும், உயர்த்த, பொது துறை எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இதற்கான அறிவிப்பு, இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகலாம்.
சர்வ தேச சந்தை நிலவரத்து ஏற்ப, உள்நாட்டில், பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை, பொது துறை எண்ணெய் நிறுவனங்களான, இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகியவற்றுக்கு, மத்திய அரசு, ஏற்கனவே வழங்கியுள்ளது.இதை தொடர்ந்து, டீசல் விலையையும், குறிப்பிட்ட கால இடைவெளியில், சிறிய அளவில் உயர்த்தி கொள்ள, பொது துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு, டிசம்பரில், மத்திய அரசு, அனுமதி வழங்கியது. சமீப காலமாக, சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இதனால், எண்ணெய் நிறுவனங்களுக்கு, 1 லிட்டர் பெட்ரோலுக்கு, 1 ரூபாய்க்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டுள்ளது.இந்த இழப்பை ஈடு செய்யும் வகையில், பெட்ரோல் விலையை, லிட்டருக்கு, 1 ரூபாயும், டீசல் விலையை, லிட்டருக்கு, 50 காசுகளும் உயர்த்த, எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
இதுகுறித்து, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தலைவர், ஆர்.எஸ்.புடலோ கூறியதாவது:சர்வ தேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை, அதிகரித்துள்ளது. இதனால், பொது துறை எண்ணெய் நிறுவனங்கள், கடும் இழப்பை சந்திக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலைகளை உயர்த்த, திட்டமிடப்பட்டுள்ளது.சர்வ தேச சந்தை நிலவரம் குறித்து, இம்மாதம், 15ம் தேதி, ஆலோசனை நடக்கவுள்ளது. அப்போது, விலையை உயர்த்துவது குறித்து முடிவெடுக்கப்படும். விலை உயர்வு எந்த அளவுக்கு இருக்கும் என்பதை, தற்போது தெரிவிக்க முடியாது.இவ்வாறு, புடேலா கூறினார்.
இதையடுத்து, பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை உயர்வு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இன்னும், ஒரு சில தினங்களில் வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|