பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்கிறதுபெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்கிறது ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.8 குறைவு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.8 குறைவு ...
தமிழகத்தில் அரிசி விலை உயர்வால் மாவு வகைகளின் விலையும் கிடு கிடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 பிப்
2013
10:48

தமிழகத்தில், இட்லி அரிசி, பச்சரிசி ஆகியவற்றின் விலையில், கடும் உயர்வு ஏற்பட்டுள்ளதை அடுத்து, அவற்றை மூலப் பொருட்களாக கொண்டு தயார் செய்யப்படும், இட்லி மாவு, புட்டு மாவு, இடியாப்ப மாவு ஆகியவற்றின் விலையில் கடும் உயர்வு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நிலவும் வறட்சி காரணமாக நெல்லுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், வெளி மாநிலங்களில் இருந்து நெல்லை ஆலை அதிபர்கள், வியாபாரிகள் கொள்முதல் செய்து, அரிசி உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக இட்லி அரிசி, பச்சரிசி விலை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், அரிசி விலை கிலோவுக்கு, எட்டு ரூபாய் முதல், 15 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதில், புட்டு, இடியாப்பம் தயாரிப்பில் முக்கிய பங்கான பச்சரிசியின் விலையில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடும் உயர்வு ஏற்பட்டுள்ளது. பச்சரிசி தற்போது கிலோ, 38 ரூபாய் முதல், 55 ரூபாய் வரை, விற்பனை செய்யப்படுகிறது. இதே போல், ரெடிமேட் இட்லி, தோசை மாவு தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் இட்லி அரிசி விலையிலும் கடும் உயர்வு ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, இட்லி கார் அரிசி, கிலோ, 36 ரூபாய் முதல், 45 ரூபாய் வரை, விற்பனை செய்யப்படுகிறது.மாவு தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் அரிசி விலை உயர்வு ஏற்பட்டுள்ளதால், மாவு விலையிலும் உயர்வு ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் வரை, ரெடிமேட் இட்லி மாவு, பிரபல நிறுவனங்களின் தயாரிப்பு கிலோ, 22 ரூபாய் முதல், 30 ரூபாய் வரை, விற்பனை செய்யப்பட்டது. நேற்று முதல் கிலோ, 30 ரூபாய் முதல், 40 ரூபாய் வரை, விற்பனை செய்யப்படுகிறது. இட்லி மாவு விலையை தொடர்ந்து புட்டு மாவு, இடியாப்ப மாவு ஆகியவற்றின் விலையிலும் உயர்வு ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் வரை, பச்சரிசி மாவு கிலோ, 28 ரூபாய்க்கு விற்றது, 34 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதே போல், புட்டு மாவு கிலோ, 55 ரூபாய் முதல், 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. நேற்று முதல் கிலோ, 70 ரூபாய் முதல், 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதே போல், இடியாப்ப மாவு கிலோ, 40 ரூபாய் முதல், 45 ரூபாய் வரை விற்றது, 55 ரூபாய் முதல், 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)