சென்செக்ஸ் 110 புள்ளிகள் சரிவில் முடிந்துள்ளது வர்த்தகம்சென்செக்ஸ் 110 புள்ளிகள் சரிவில் முடிந்துள்ளது வர்த்தகம் ... நாட்டின் பொது பணவீக்கம் 6.62 சதவீதமாக குறைவு நாட்டின் பொது பணவீக்கம் 6.62 சதவீதமாக குறைவு ...
ஆஸ்திரேலியாவிற்கு வரும் இந்திய பயணிகள் எண்ணிக்கை உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 பிப்
2013
00:00

மெல்போர்ன்:வரும், 2020ம் ஆண்டிற்குள், ஆஸ்திரேலியாவிற்கு வரும், இந்திய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை, இரண்டு மடங்காக அதிகரிக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என, ஆஸ்திரேலிய சுற்றுலா துறையின் நிர்வாக இயக்குனர் ஆன்ட்ரூ மெக்எவாய் தெரிவித்தார்.இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது:
தற்போது, ஆஸ்திரேலிய சுற்றுலா துறை சந்தையில், இந்தியா எட்டாவது மிகப்பெரிய நாடாக விளங்கு கிறது.இதனை எடுத்துக்காட்டும் வகையில், சென்ற, 2012ம் ஆண்டில், ஆஸ்திரேலியா வரும், இந்தியா சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, 7.4 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1,59,200 ஆக அதிகரித்துள்ளது.மேலும், இவர்கள், 71.60 கோடி டாலரை, ஆஸ்திரேலியாவில் செலவிட்டுள்ளனர்.
எனவே, வரும், 2020ம் ஆண்டிற்குள், இந்திய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, 3 லட்சமாகவும், அவர்கள் செலவிடும் தொகை, 230 கோடி டாலராகவும் உயரும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.இது, வரும், 2020ம் ஆண்டிற்குள், ஆஸ்திரேலியா சுற்றுலா துறை எட்ட நிர்ணயித்துள்ள, 14 ஆயிரம் கோடி டாலரை அடைய, மிக ஏதுவாக இருக்கும். குறிப்பாக, ஆசிய நாடுகளில் இருந்து, சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கையை, இரண்டு மடங்காக உயர்த்த, நீண்ட கால ஊக்குவிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.இவ்வாறு, ஆன்ட்ரூ கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)