ஆஸ்திரேலியாவிற்கு வரும் இந்திய பயணிகள் எண்ணிக்கை உயர்வுஆஸ்திரேலியாவிற்கு வரும் இந்திய பயணிகள் எண்ணிக்கை உயர்வு ... நாட்டின் பொது பணவீக்கம் 6.62 சதவீதமாக குறைவு நாட்டின் பொது பணவீக்கம் 6.62 சதவீதமாக குறைவு ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
தங்கத்தின் தேவை 864 டன்னாக குறைந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 பிப்
2013
00:10

மும்பை:சென்ற, 2012ம் ஆண்டில், இந்தியாவில், தங்கத்திற்கான தேவை, 12 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 864.20 டன்னாக சரிவடைந்து உள்ளது. இது, இதற்கு முந்தைய 2011ம் ஆண்டில், 986.30 டன்னாக அதிகரித்து காணப்பட்டது என, உலக தங்க கவுன்சில் தெரிவித்து உள்ளது.
பயன்பாடு:தங்கம் இறக்குமதி மீதான வரி அதிகரிப்பு, உள்நாட்டில் விலை உயர்வு போன்றவற் றால், சென்ற ஆண்டில், இதன் பயன்பாடு மிகவும் குறைந்து போனதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.எனினும், நடப்பு, 2013ம் ஆண்டில், நாட்டின் தங்கம் பயன்பாடு, 11 சதவீதம் அதிகரித்து, 965 டன்னாக அதிகரிக்க வாய்ப்புள்ளது என, உலக தங்க கவுன்சில் தெரிவித்து உள்ளது.சென்ற, 2012ம் ஆண்டில், உள்நாட்டில் ஆபரணங்களுக் கான தேவை, 11 சதவீதம் சரிவடைந்து, 618.30 டன்னிலிருந்து, 552 டன்னாக வீழ்ச்சி கண்டது.
அதேசமயம்,மதிப்பின் அடிப்படையில் இதற்கான தேவை,8 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1.46லட்சம் கோடி யிலிருந்து, 1.58 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. இதே போன்று, தங்கம் முதலீட்டிற்கான தேவை, 15 சதவீதம் சரிவடைந்து, 368 டன்னிலிருந்து, 312.20 டன்னாக குறைந்துள்ளது. அதேசமயம், மதிப்பின் அடிப்படையிலான, தங்கம் முதலீட்டிற்கான தேவை, 3 சதவீதம் உயர்ந்து, 86,936 கோடியிலிருந்து, 89,412 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.
வளர்ச்சி:பொருளாதார சுணக்க நிலை, தங்கத்தின் விலை நிலவரம் ஆகியவை, இந்தியா மற்றும் சீன தங்கம் சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும், கடந்த 10 ஆண்டுகளில், இவ்விரு நாடு களிலுமாக, தங்கத்திற்கான தேவை சராசரியாக, 30 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டுள்ளது என, உலக தங்க கவுன்சிலின் நிர்வாக இயக்குனர் மார்க்கஸ் கிரப் தெரிவித்தார்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)