ஆஸ்திரேலியாவிற்கு வரும் இந்திய பயணிகள் எண்ணிக்கை உயர்வுஆஸ்திரேலியாவிற்கு வரும் இந்திய பயணிகள் எண்ணிக்கை உயர்வு ... ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 சரிவு ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 சரிவு ...
நாட்டின் பொது பணவீக்கம் 6.62 சதவீதமாக குறைவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 பிப்
2013
00:13

புதுடில்லி:நடப்பாண்டு ஜனவரி மாதத்தில், மொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையில் கணக் கிடப்படும், நாட்டின் பொது பணவீக்கம், 6.62 சதவீதமாகக் குறைந்துள்ளது.இது, சென்ற ஆண்டு, டிசம்பர் மாதத்தில், 7.18 சதவீதம் என்ற அளவில் இருந்தது. நாட்டின் பணவீக்கம், தொடர்ந்து நான்கு மாதங்களாகக் குறைந்து வருகிறது.
உணவு பொருட்கள்:கடந்த 2012ம் ஆண்டு, ஜனவரி மாதத்தில் பொது பணவீக்கம்,7.23 சதவீதம் என்ற அளவில் அதிகரித்து காணப்பட்டது.நடப்பாண்டு, சென்ற ஜனவரி மாதத்தில், முக்கிய பொருட்களுக்கான பணவீக்கம், 10.31 சதவீதம் என்ற அளவில் அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டின், இதே மாதத்தில், 2.76 சதவீதம் என்ற அளவில் குறைந்து காணப்பட்டது.உணவுப் பொருட்களின் கீழ் இடம் பெற்றுள்ள வெங்காயம் மற்றும் அரிசி விலை அதிகரித்துள்ள நிலையிலும், சென்ற ஜனவரி மாதத்தில், பணவீக்கம் குறைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்த விலை குறியீட்டு எண்: கணக்கிடுவதில், உணவுப் பொருட்களின் பங்களிப்பு, 14.3 சதவீதம் என்ற அளவில் உள்ளது. சென்ற ஜனவரி மாதத்தில், உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம், 11.88 சதவீதம் என்ற அளவில் அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில், மைனஸ் 0.68 சதவீதம் என்ற அளவில் இருந்தது.
சென்ற ஜனவரி மாதத்தில், ஒட்டுமொத்த அளவில் காய்கறிகள் விலை குறைந்திருந்த நிலையில், வெங் காயம் மற்றும் உருளைக் கிழங்கின் விலை மிகவும் அதிகரித்து காணப்பட்டது.நடப்பாண்டு ஜனவரி மாதத்தில், காய்கறி விலை, 23.25 சதவீதம் என்ற அளவில் குறைந்துள்ளது. இது, இதற்கு முந்தைய டிசம் பர் மாதத்தில், 28.45 சதவீதம் என்ற அளவில் இருந்தது.வெங்காயத்தின் விலை, மிகவும் அதிக அளவாக, 111.52 சதவீதம் என்ற அளவில் உயர்ந்துள்ளது. இது, இதற்கு முந்தைய டிசம்பர் மாதத்தில், 69.24 சதவீதம் என்ற அளவில் குறைந்திருந்தது. உருளைக் கிழங்கு விலை, 79.07 சதவீதம் என்ற அளவில் அதிகரித்துள்ளது.
கோதுமை:கணக்கீட்டு காலத்தில், அரிசி விலை, 17.10 சதவீதத்தில் இருந்து, 17.31 சதவீதம் என்ற அளவில் உயர்ந்துள்ளது. கோதுமை மற்றும் தானியங்கள் விலை முறையே, 21.39 சதவீதம் மற்றும் 18.09 சதவீதம் என்ற அளவில் அதிகரித்துள்ளது.பருப்பு வகைகள் விலை, 16.89 சதவீதம் என்ற அளவில் உயர்ந்துள்ளது. முட்டை, இறைச்சி மற்றும் மீன் ஆகியவற்றின் விலை, 10.81 சதவீதம் என்ற அளவிலும், பால் விலை, 4.47 சதவீதம் என்ற அளவிலும் அதிகரித்துள்ளன. பழங்கள் விலை, 8.42 சதவீதம் என்ற அளவில் உயர்ந்துள்ளது.
உணவு சாராத பொருட்களுக்கான பணவீக்கம்,0.72 சதவீதத்தில் இருந்து, 10.49 சதவீதமாக அதிகரித் துள்ளது.எரிபொருள் மற்றும் மின்சாரத்திற்கான பணவீக்கம், 16.99 சதவீதத்தில் இருந்து, 7.06 சதவீதமாகக் குறைந்துள்ளது. தயாரிப்பு பொருட்களுக்கான பணவீக்கம், 6.71 சதவீதத்தில் இருந்து, 4.81 சதவீதம் என்ற அளவில் குறைந்துள்ளது.ரிசர்வ் வங்கி, நடப்பு நிதியாண்டின் இறுதியில், பணவீக்கம், 6.8 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என, மதிப்பீடு செய்துள்ளது.
வட்டி விகிதம்:கடந்த மாதம், ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதன் நிதி ஆய்வு கொள்கையில், வங்கிகளுக்கான, "ரெப்போ' வட்டி விகிதங்களை, 0.25 சதவீதம் குறைத்தது.வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ள அதன் நிதி சீராய்வு கூட்டத்திலும், வட்டி விகிதங்களை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதையடுத்து, ரிசர்வ் வங்கி மதிப்பிட்ட அளவிற்கே, பணவீக்கம் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதனிடையே, "நாட்டின் சில்லரை பணவீக்கமும், முக்கிய உணவுப் பொருட்களுக்கான மொத்த விலை பணவீக்கமும் தொடர்ந்து அதிகமாகவே உள்ளது' என, பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு தலைவர் ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.
எனினும், கையிருப்பில் உள்ள உணவுப் பொருட்களை அதிக அளவில் சந்தைக்கு அனுப்புவதன் மூலம், பணவீக்கம் குறையும் என்று அவர் மேலும் கூறினார்.வரும் மார்ச் இறுதிக்குள், பொதுப் பணவீக்கம் 6.5 சதவீதமாக குறையும் என்றும், ரங்கராஜன் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)