பதிவு செய்த நாள்
15 பிப்2013
14:57
ஜப்பான் நாட்டை சேர்ந்த நிஸான் கார் நிறுவனம், இந்தியாவில் சன்னி காரை, 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தியது. தற்போது, சன்னி காரின் ஸ்பெஷல் எடிசனை அறிமுகப்படுத்தியுள்ளது. 'எக்ஸ்வி ஸ்பெஷல் எடிசன்' என்ற பெயரில் புதிய கார் விற்பனைக்கு வந்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் என, இரண்டு வகைகளிலும் கிடைக்கும். இரண்டு வகைகளிலும், 1.5 லிட்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வசதி கொண்டது. பெட்ரோல் காரின் விலை ரூ.8.60 லட்சம்; டீசல் காரின் விலை ரூ.9.68 லட்சம் (எக்ஸ்ஷோரூம், டில்லி) என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சன்னி கார், தாராள இடவசதிக்கு பெயர் பெற்றது. புதிய காரின் உட்புறத்தில், கூடுதல் இட வசதிக்கு ஏற்பாடு செய்யயப்பட்டுள்ளது. காரின் உட்புறத்திலும், வெளிப்புறத்திலும், ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காரின் பின்பகுதியில், சென்சார்களுடன் கூடிய, 'ரியர் பார்க்கிங் கேமரா' வசதி இடம் பெற்றுள்ளது. டச் ஸ்கிரீன் மல்டி மீடியா சிஸ்டம் வசதியும் உண்டு.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|