தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 குறைவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.152 குறைவு ... ஆதரவு விலை உயர்வால் தானியங்கள் பயிர் பரப்பளவு அதிகரிப்பு ஆதரவு விலை உயர்வால் தானியங்கள் பயிர் பரப்பளவு அதிகரிப்பு ...
சூடு பிடிக்கும் மலிவு விலை 'ஏசி' விற்பனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 பிப்
2013
00:36

'ஏசி' சாதனங்கள் விலை கிடு.. கிடு..வென உயர்ந்து வருவதால், அவற்றின் விற்பனை மந்தம்அடைந்துள்ளது. அதனால், விற்பனையை அதிகரிக்கும் நோக்கில், பல நிறுவனங்கள், மலிவு விலை 'ஏசி' சாதனங்களை தயாரிக்கத் துவங்கியுள்ளன.இதையடுத்து, சந்தையில், மலிவு விலை 'ஏசி' விற்பனை சூடு பிடித்துள்ளது.உள்நாட்டு நிறுவனங்கள், இறக்குமதி செய்யப்பட்ட முக்கிய உதிரி பாகங்களை கொண்டு, 'ஏசி' சாதனங்களை தயாரிக்கின்றன.
ரூபாயின் மதிப்பு:இந்நிலையில், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி கண்டுள்ளதால், இந்நிறுவனங்களின் 'ஏசி' தயாரிப்புச் செலவு அதிகரித்துள்ளது. குறிப்பாக, 2011ம் ஆண்டு ஆகஸ்ட் முதல், ரூபாய் மதிப்பு 22.5 சதவீதம் சரிவடைந்துள்ளது.இதனால், பல நிறுவனங்கள், கடந்த ஒன்றரை ஆண்டுகளில், ஏ.சி.சாதனங்களின் விலையை, 15-20 சதவீதம் வரை, உயர்த்திஉள்ளன.
சாதாரண 'ஸ்பிலிட்' 'ஏசி'யின் விலை, 24 - 25 ஆயிரம் ரூபாயாக உயர்ந்து விட்டது. இதே பிரிவில், சற்று கூடுதல் வசதிகள் உள்ள ஏ.சி.,க்களின் விலை, 30 ஆயிரம் ரூபாயாக உள்ளது.மின் சிக்கனத்தை குறிக்கும் ஐந்து நட்சத்திரங்கள் கொண்ட 'ஏசி'யின் விலை, இதை விட அதிகமாக உள்ளது.இந்த விலை ஏற்றத்தால், எண்ணற்றோர் 'ஏசி' வாங்கும் திட்டத்தை தள்ளிப் போட்டு உள்ளதாக, ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், பல நிறுவனங்கள், பட்ஜெட் 'ஏசி'க்களை தயாரித்து, நுகர்வோரை கவர்வதில் தீவிரம் காட்டி வருகின்றன.
இதர 'ஏசி'க்களை விட, இந்த சாதனங்களில், கூடுதல் சிறப்பம்சங்கள் குறைவாக இருக்கும். மேலும், 'ஏசி' தயாரிப்பின் போது, பல நிலைகளில் சிக்கனமான உதிரிபாகங்கள் கையாளப்படுகின்றன. உதாரணமாக, வழக்கமான 'ஏசி'க்களில் தாமிரக் கம்பிகள் காணப்படும். ஆனால் பட்ஜெட் 'ஏசி'க்களில், விலை குறைந்த, அதே சமயம், செயல்பாட்டில் மாற்றமில்லாத அலுமினியக் கம்பிகள் பயன்படுத்தப்படுகின்றன.
நடவடிக்கை:இத்தகைய நடவடிக்கைகளால், இது போன்ற 'ஏசி'க்களின் தயாரிப்பு செலவு குறைந்து, 19 ஆயிரத்தில் இருந்து, 22 ஆயிரம் ரூபாய் வரையிலான விலையில் விற்கப்படுகின்றன.'கடந்த ஆண்டு, பானாசோனிக் கார்ப்பரேஷன் விற்பனை செய்த, 4.50 லட்சம் 'ஏசி'க்களில், பட்ஜெட் 'ஏசி'க்களின் பங்களிப்பு, 22 சதவீதமாக இருந்தது' என, இந்நிறுவனத்தின் மண்டல துணை நிர்வாக இயக்குனர் சுரேஷ்குமார் பந்தி தெரிவித்தார்.
நிறுவனம், பட்ஜெட் பிரிவில், 1.25 டன் மற்றும் 1.6 டன் 'ஸ்பிலிட்' 'ஏசி' சாதனங்கள் விலையை, முறையே 19 ஆயிரம் மற்றும் 22 ஆயிரம் ரூபாயாக நிர்ணயித்து உள்ளது.வோல்டாஸ்: அது போன்று இதே பட்ஜெட் 'ஏசி' பிரிவில், வோல்டாஸ் நிறுவனத்தின், 0.8 -1.5 டன் குளிர்சாதனங்களின் விலை, முறையே, 18 ஆயிரம் மற்றும் 25 ஆயிரம் ரூபாயாக உள்ளது. இந்நிறுவனம், ஒரு டன் 'ஏசி' சாதனத்தின் விலையை, 20 ஆயிரம் - 21 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது.
மேற்கண்ட நிறுவனங்களை தொடர்ந்து, புளு ஸ்டார் நிறுவனமும், பட்ஜெட் 'ஏசி' தயாரிப்பில் களமிறங்கி உள்ளது. இந்நிறுவனம், 'விண்டோ' 'ஏசி' விலையில், பட்ஜெட் பிரிவிலான 'ஸ்பிலிட்' 'ஏசி'-யை விரைவில் சந்தைப்படுத்த உள்ளது.இதுகுறித்து, புளு ஸ்டார் நிறுவனத்தின் தலைவர் ('ஏசி'-ரெப்ரிஜிரேட்டர் சாதனங்கள் பிரிவு) பீ.தியாகராஜன் கூறியதாவது: சிறு நகரங்களில், 'விண்டோ' 'ஏசி'க்கள் திருடு போவது முக்கிய பிரச்னையாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு, இந்நகரங்களில் பட்ஜெட்'ஸ்பிலிட்' 'ஏசி'க்களை அறிமுகப்படுத்த உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அறிமுகம்:இது போன்று, பல நிறுவனங்கள், பட்ஜெட் குளிர்சாதனங்களை அறிமுகப்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றன. எனினும், ஹிட்டாச்சி, கோத்ரெஜ் அப்ளையன்சஸ், டைகின் ஆகிய நிறுவனங்கள், பட்ஜெட் 'ஏசி' தயாரிக்கும் திட்டமில்லை என, தெரிவித்துள்ளன.இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத, வீட்டு சாதன
நிறுவனமொன்றின், விற்பனை மேலாளர் கூறியதாவது:கரன்சியின் ஏற்ற, இறக்கம் மற்றும் உற்பத்திச் செலவு அதிகரிப்பால், வழக்கமான 'ஏசி'க்களின் விலை உயர்ந்து வருகிறது. இதன் காரணமாகவே பல நிறுவனங்கள் பட்ஜெட் 'ஏசி' தயாரிப்பில் களமிறங்கி உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)