பதிவு செய்த நாள்
17 பிப்2013
00:40
சென்னை:நேற்று ஒரே நாளில், ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு, 152 ரூபாய் குறைந்துள்ளது. கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை அதிக ஏற்றம், இறக்கம் இன்றி காணப்பட்டது.இந்நிலையில், சென்னையில், நேற்று ஒரே நாளில், தங்கத்தின் விலை கிராமுக்கு, 19 ரூபாய் குறைந்து, 2,811 ரூபாய்க்கு விற்பனையானது.ஒரு சவரன் விலை, 152 ரூபாய் சரிவடைந்து, 22,488 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 10 கிராம் சுத்த தங்கத்தின் விலை, 200 ரூபாய் குறைந்து, 30,065 ரூபாய்க்கு விற்பனையானது.
நேற்று முன்தினம், 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம், 2,830 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரன் தங்கத்தின் விலை, 22,640 ரூபாய்க்கு விற்பனையானது. 24 காரட், 10 கிராம் சுத்த தங்கத்தின் விலை, 30,265 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.நேற்று, ஒரு கிலோ வெள்ளியின் விலை, 55,960 ரூபாயாக இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|