பதிவு செய்த நாள்
18 பிப்2013
00:34

மும்பை: நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் (அக்.,-டிச.,), நாட்டின் நிகர சேவை துறை ஏற்றுமதி, 14.46 சதவீதம் என்ற குறைந்த அளவில் வளர்ச்சி கண்டு, 1,717 கோடி டாலராக (94,435 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகர சேவை துறை ஏற்றுமதி, சென்ற நிதியாண்டின் இதே காலாண்டில், 20.3 சதவீதம் அதிகரித்து, 1,500 கோடி டாலராகவும் (82,500 கோடி ரூபாய்), கடந்த 2010-11ம் நிதியாண்டின், மூன்றாவது காலாண்டில், 47.5 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1,250 கோடி டாலராகவும் (68,750 கோடி ரூபாய்) இருந்தது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆக, சேவை துறையின் நிகர ஏற்றுமதி, ஒவ்வொரு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில், தொடர்ச்சியாக குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒரு நாட்டின், மதிப்பின் அடிப்படையிலான சேவைகள், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஆகியவற்றிற்கு இடையிலான வித்தியாசமே, நிகர, சேவை துறை ஏற்றுமதியாகும். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், சேவைத் துறையின் பங்களிப்பு, 55 சதவீதமாக உள்ளது.சென்ற டிசம்பர் மாதத்தில், நாட்டின் சேவைத் துறை ஏற்றுமதி, 7 சதவீதம் அதிகரித்து, 1,202 கோடி டாலரிலிருந்து, 1,288 கோடி டாலராக வளர்ச்சி கண்டிருந்தது.இதேபோன்று, மதிப்பீட்டு மாதத்தில், நாட்டின் சேவைகள் இறக்குமதியும், 661 கோடி டாலரிலிருந்து, 676 கோடி டாலராக சற்று அதிகரித்துள்ளது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தற்காலிக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|