பதிவு செய்த நாள்
18 பிப்2013
00:36

புதுடில்லி:மத்திய அரசு, இறக்குமதி செய்யப்படும், 10 கிராம் தங்கத்தின் மதிப்பை, 535 டாலராக குறைத்துள்ளது.சர்வதேச விலை நிலவரத்தின் அடிப்படையில், இறக்குமதி செய்யப்படும், சுத்திகரிக்கப்பட்ட பாமாயில், தங்கம், வெள்ளி உள்ளிட்ட உலோகங்களின் மதிப்பை, மத்திய அரசு, 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றி அமைத்து வருகிறது.
இவ்வகையில், இறக்குமதி செய்யப்படும் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் மீதான மதிப்பை, டன்னுக்கு, 870 டாலரில் இருந்து, 912 டாலராக உயர்த்தியுள்ளது. பித்தளை கழிவின் மதிப்பை, 4,077 டாலரில் இருந்து, 4,074 ஆக குறைத்துள்ளது.10 கிராம் தங்கத்தின் இறக்குமதி மதிப்பை, 545 டாலரில் இருந்து, 535 டாலராக குறைத்துள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் இறக்குமதி மதிப்பை, 1,018 டாலரில் இருந்து, 1,003 டாலராக குறைத்துள்ளதாக, மத்திய சுங்கத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|