பதிவு செய்த நாள்
18 பிப்2013
00:39

சேலம்:தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால், சிறுதானியங்கள், மளிகை பொருட்களின் விளைச்சலில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதனால், இவற்றை மூலப்பொருட்களாக கொண்டு தயார் செய்யப்படும், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு ஏற்படும் என, வியாபாரிகள் தெரிவித்தனர்.பருவ மழைவடகிழக்கு பருவமழை குறைந்ததால், தமிழகத்தில், நீர் நிலைகள் வற்றியதோடு, கடும் வறட்சி காணப்படுகிறது. இதனால், அரசு, சென்னையைத் தவிர, 31 மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்துள்ளது.
தமிழக நீர் நிலைகளில் குறைந்த அளவில் இருந்த தண்ணீரும், வெயில் தாக்கம் காரணமாக, வற்றி விட்டதால், நெற்பயிர் மட்டு மின்றி தோட்டக்கலை, மானாவாரி பயிர்களின் விளைச்சலிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதனால், தமிழகத்தில் விவசாய விளைபொருட்களின் விலை, திடீர் உயர்வு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த ஆண்டுடன், ஒப்பிடுகையில், அனைத்து வகையான அரிசி விலையும், கிலோவுக்கு, எட்டு ரூபாய் முதல், 18 ரூபாய் வரை உயர்ந்துள்ளன.அரிசியை தொடர்ந்து, சிறு தானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம் மிளகாய் வற்றல், கொத்தமல்லி உள்ளிட்டவற்றின் விலையும், உயர்ந்துள்ளன.
நிலக்கடலை:எண்ணெய் வித்துக்களை பொறுத்தவரை, எள், நிலக்கடலை, சூரியகாந்தி விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதனால், தமிழகத்தின் பெரிய சந்தைகளாக கருதப்படும் விருதுநகர், சென்னை, சேலம் லீ பஜாருக்கு, விற்பனைக்கு வரும் சிறு தானியங்கள், மளிகை பொருட்கள், எண்ணெய் வித்துக்களின் வரத்தில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளன.அவற்றின் விலையும், ஏறுமுகத்தில் உள்ளது. இதனால், இவற்றை பயன் படுத்தி தயார் செய்யப்படும் ஊட்டச்சத்து பொருட்கள், மளிகை பொடி வகைகள், எண்ணெய் வகைகளின் விலையும் உயர்ந்துள்ளன.
செவ்வாய்ப்பேட்டை மளிகை வியாபாரி ஒருவர் கூறியதாவது:தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக, மானாவாரி பயிர்களின் விளைச்சலில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அவற்றின் விலை, வழக்கத்துக்கு மாறாக, பிப்ரவரி மாதத்திலேயே உயர்ந்துள்ளது.கர்நாடகா:வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், கர்நாடகா, ஆந்திரா மற்றும் வட மாநிலங்களில் இருந்து பொருட்கள் விற்பனைக்கு வந்தால் மட்டுமே, இவற்றின் விலை கட்டுக்குள் இருக்கும். அம்மாநிலங்கள் கை கொடுக்காத பட்சத்தில், அனைத்து பொருட்களின் விலையும் கடுமையாக உயரும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|