பதிவு செய்த நாள்
18 பிப்2013
00:40

கோல்கட்டா:பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐ.ஓ.சி.,) நிறுவனம், வரும் 2013 - 14ம் நிதியாண்டில், 10 - 11 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக, இந்நிறுவனத்தின் தலைவர் ஆர்.எஸ்.புட்டோலா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:உள்நாட்டில், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பில், மிகப் பெரிய நிறுவனமாக, ஐ.ஓ.சி., திகழ்கிறது. இந்தியாவில், பெட்ரோலியப் பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது.
இதையடுத்து, நிறுவனம் பல்வேறு விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.நிறுவனம், நடப்பு 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2012 - 17), 56 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, வரும் 2013 - 14ம் நிதியாண்டில், 10 - 11 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது. குழாய்களை மாற்றுவது போன்ற, திட்டமிடாத பணிகளுக்காக 3,500 - 4,000 கோடி ரூபாய் செலவிடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|