பதிவு செய்த நாள்
18 பிப்2013
00:41

குன்னூர்:கடந்த, 2012ம் ஆண்டில், நாட்டின், தேயிலை உற்பத்தி, 111 கோடி கிலோவாக குறைந்துள்ளது. இது, இதற்கு முந்தைய, 2011ம் ஆண்டில், மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை (115 கோடி கிலோ) விட, 11 சதவீதம் குறைவாகும்.ஆக, இடைப்பட்ட காலத்தில், தேயிலை உற்பத்தி, 11 கோடி கிலோ குறைந்துள்ளது. மதிப்பீட்டு காலத்தில், வட மாநிலங்களின் தேயிலை உற்பத்தி சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது.
அதேசமயம், தென் மாநிலங்களில், இதன் உற்பத்தி சரிவடைந்துள்ளதாக, தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது. வட மாநிலங்களின் தேயிலை உற்பத்தி, 45.30 லட்சம் கிலோ குறைந்து, 88 கோடி கிலோவை தாண்டிஉள்ளது. இதில், அசாம் மாநிலத்தின் தேயிலை உற்பத்தி, 58.80 லட்சம் கிலோ என்ற அளவில் உள்ளது. மேற்கு வங்கத்தின் தேயிலை உற்பத்தி, 27.16 லட்சம் கிலோ என்ற அளவில் இருந்து, 27.58 கோடி கிலோவாக உயர்ந்துள்ளது.
தென் மாநிலங்களின் தேயிலை உற்பத்தி, 85 லட்சம் கிலோ குறைந்து, 23.16 கோடி கிலோவாக குறைந்துஉள்ளது. இதில், தமிழகத்தின் தேயிலை உற்பத்தி, 16.58 கோடி கிலோ என்ற அளவில் இருந்து, 16.28 கோடி கிலோவாக குறைந்துள்ளது. கேரளாவின் தேயிலை உற்பத்தி, 6.88 கோடி கிலோ என்ற அளவில் இருந்து, 6.31 கோடி கிலோவாக குறைந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|