பதிவு செய்த நாள்
18 பிப்2013
12:40

மும்பை : டாடா நிறுவனத்தின் இண்டிகோ இ.சி.எஸ்., கார் தொடர்ந்து நான் ஸ்டாப்பாக 19ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்து லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான டாடா நிறுவனம், தனது டாடா இண்டிகோ இ.சி.எஸ். காரை அறிமுகம் செய்துள்ளது. சந்தையிலும் இந்த ரக கார் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த ரக கார் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதுகுறித்து இந்நிறுவனத்தின் மூத்த அதிகாரி ரஞ்சித் யாதவ் கூறியுள்ளதாவது, இந்தியாவில் அதிகம் விற்கும் கார்களில் இண்டிகோ இ.சி.எஸ்., கார் 3வது இடத்தை பிடித்துள்ளது. அதிக மைலேஜ், காரின் உட்புறம் போதுமான இடவசதி, அற்புதமான டிசைன் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை இந்த கார் பெற்றுள்ளது. இந்த காரை மேலும் பிரபலப்படுத்தும் வகையில் இந்தியா முழுக்க வலம் வர செய்ய திட்டமிட்டோம். அதன்படி பிப்ரவரி முதல்வாரத்தில் கொடியசைத்து இந்த பயணத்தை துவக்கி வைத்தோம்.
இந்தியாவின் நான்கு நுழைவாயில்களான மேற்கில் கோதேஸ்வரிலிருந்து கிழக்கே கிபுது வரையும், வடக்கே காஷ்மீரிலிருந்து தெற்கே கன்னியாகுமரி வரையும் சுமார் 19 மாநிலங்களில், 15 நாட்களாக நான்ஸ்டாப் 14ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவு வலம் வந்து லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. குறைந்தபட்சமாக - 4 டிகிரி வெப்பநிலையில் இருந்து அதிகப்பட்சமாக 48டிகிரி வெப்பநிலை வரை இந்த கார் பயணம் செய்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|