பதிவு செய்த நாள்
19 பிப்2013
01:15

புதுடில்லி:பொதுத் துறையைச் சேர்ந்த நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் (என்.டீ.பி.சி.,), பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆகிய இரு நிறுவனங்கள், வரும் 2013 - 14ம் நிதியாண்டில், அவற்றின் விரிவாக்கத் திட்டங்களுக்காக, 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளன.அனல் மின் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் என்.டீ.பி.சி., நிறுவனம், வரும் நிதியாண்டில், 20,200 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.
இதில், மின் நிலையங்களை புனரமைத்தல் மற்றும் நவீனமயமாக்குதல் பணிகளுக்காக, 5,113 கோடி ரூபாய் செலவிட உள்ளது.மீதத் தொகை, நாடு தழுவிய அளவில், புதிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பதற்காக செலவிடப்படும். பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனம், வரும் நிதியாண்டில், 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதில், நடைமுறையில் உள்ள, 126 திட்டங்களுக்காக, 18,500 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது. 57 புதிய திட்டங்களுக்காக, 1,286 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளது.இந்நிறுவனங்கள் மேற்கொள்ள உள்ள முதலீட்டுத் திட்டங்கள், அவற்றின் உள்வள நிதி ஆதாரம் மற்றும் அரசின் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|