பதிவு செய்த நாள்
19 பிப்2013
01:16

கோல்கட்டா:சென்ற ஜனவரி மாதத்துடன் நிறைவடைந்த, 10 மாத காலத்தில், நாட்டின், பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி, 4,533 கோடி டாலராக (2.49 லட்சம் கோடி ரூபாய்) குறைந்துள்ளது.
வார்ப்படங்கள்:இது, கடந்த நிதி ஆண்டின், இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை (4,822 கோடி டாலர்/ 2.65 லட்சம் கோடி ரூபாய்) விட, 6 சதவீதம் குறைவாகும்.பொறியியல் சாதனங்களின் கீழ், விமானங்கள், விண்வெளி ஓடம் ஆகியவற்றின் உதிரி பாகங்கள், உபகரணங்கள், இயந்திரங்கள் மற்றும் தளவாடங்கள், வார்ப்படங்கள் @பான்றவை இடம்பெற்றுள்ளன.
நடப்பு நிதியாண்டில், மாதம் ஒன்றுக்கான, பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி, 500 கோடி டாலர் (27,500 கோடி ரூபாய்) அளவை தாண்டவில்லை. அதாவது இதன் சராசரி மாத ஏற்றுமதி, 440-470 கோடி டாலர் என்ற அளவிலேயே இருந்தது என, பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது. கப்பல்கணக்கீட்டு காலத்தில், விமானங்கள், விண்வெளி ஓடம் ஆகியவற்றின் உதிரி பாகங்கள் ஏற்றுமதி, 205 கோடி டாலரில் இருந்து, 142 கோடி டாலராக குறைந்துள்ளது. அதேசமயம், கப்பல், படகு போன்றவற்றிற்கான பாகங்கள் ஏற்றுமதி, 56 சதவீதம் வளர்ச்சிகண்டு, 295 கோடி டாலரில் இருந்து, 671 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|