நாட்டின் சர்க்கரை உற்பத்தி166 லட்சம் டன்னாக வளர்ச்சிநாட்டின் சர்க்கரை உற்பத்தி166 லட்சம் டன்னாக வளர்ச்சி ... உயர்கிறது மின் இணைப்பு டிபாசிட் கட்டணம் உயர்கிறது மின் இணைப்பு டிபாசிட் கட்டணம் ...
ஆபரணங்கள் ஏற்றுமதி ரூ.1.69 லட்சம் கோடியாக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 பிப்
2013
01:26

புதுடில்லி:நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான, 10 மாத காலத்தில், நாட்டின், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி, 1.69 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இது, சென்ற நிதியாண்டின், இதே காலத்தில், மேற்கொள்ளப் பட்ட ஏற்றுமதியை (1.68 லட்சம் கோடி ரூபாய்) விட, 0.95 சதவீதம் அதிகமாகும் என, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தங்கம் இறக்குமதி:உள்நாட்டில், தங்கம் உற்பத்தி மிகவும் குறைவாகும். இதனால், இந்தியாவின் தங்கத்திற்கான தேவை, இறக்குமதி வாயிலாக பூர்த்தி செய்யப்படுகிறது.நாட்டின், மொத்த இறக்குமதி செலவினத்தில், கச்சா எண்ணெய்க்கு அடுத்து இரண்டாவது இடத்தில், தங்கம் உள்ளது. இதனால், சென்ற செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த, இரண்டாவது காலாண்டில், இந்தியாவின், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நடப்பு கணக்கு பற்றாக்குறை, 5.4 சதவீதமாக அதிகரித்தது.

இதையடுத்து, அண்மையில், தங்கம் இறக்குமதி மீதான வரி,4 சதவீதத்தில் இருந்து, 6 சதவீதமாக உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.இந்தியா, சவுதி அரேபியா, துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இருந்து, தங்கம் மற்றும் வைரங்கள் இறக்குமதி செய்யப்பட்டு, அவை கலை நயமிக்க ஆபரணங்களாக தயாரிக்கப்படுகின்றன. இவ்வாறு, அழகிய வடிவங்களில் உருவாக்கப்படும் ஆபரணங்கள், அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட, உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான, 10 மாத காலத்தில், நறுக்கப்பட்ட மற்றும் பட்டைத் தீட்டப்பட்ட வைரங்கள் ஏற்றுமதி, 72,056 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது, சென்ற நிதியாண்டின், இதே காலத்தில், மேற்கொள்ளப் பட்ட ஏற்றுமதியை (93,179 கோடி ரூபாய் ) விட, 22.67 சதவீதம் குறைவாகும்.

கச்சா வைரம்:மதிப்பீட்டு காலத்தில், தங்க ஆபரணங்கள் ஏற்றுமதி, 72.78 சதவீதம் வளர்ச்சிகண்டு, 36,155 கோடியிலிருந்து, 60,981 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. தங்க பதக்கங்கள் மற்றும் நாணயங்கள் ஏற்றுமதி, 14.71 சதவீதம் சரிவடைந்து, 27,565 கோடி ரூபாயிலிருந்து, 23,509 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. நவரத்தினங்கள் ஏற்றுமதி, 47.6 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1,329 கோடியிலிருந்து, 1,943 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.வெள்ளி ஆபரணங்கள் ஏற்றுமதி, 27.47 சதவீதம் அதிகரித்து, 2,825 கோடியிலிருந்து, 3,584 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

கச்சா வைரங்கள் ஏற்றுமதி, 3.58 சதவீதம் குறைந்து, 6,832 கோடியிலிருந்து, 6,587 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. முத்துக்கள் ஏற்றுமதி, 12 கோடியிலிருந்து, 20 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. ஆபரணங்களில் பதிக்கப்படும் செயற்கை கற்கள் ஏற்றுமதி, 105 கோடியிலிருந்து, 129 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.நடப்பாண்டு ஜனவரி மாதத்தில், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி, 17,861 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது, சென்ற ஆண்டின், இதே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை (16,953 கோடி ரூபாய்) விட, 5.36 சதவீதம் உயர்வாகும்.கணக்கீட்டு மாதத்தில், நறுக்கப்பட்ட மற்றும் பட்டை தீட்டப்பட்ட வைரங்கள் ஏற்றுமதி, 1.89 சதவீதம் குறைந்து, 9,350 கோடி ரூபாயிலிருந்து, 9,174 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.

தங்க ஆபரணங்கள் ஏற்றுமதி, 13.19 சதவீதம் உயர்ந்து, 3,736 கோடி ரூபாயிலிருந்து, 4,228 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.முத்துக்கள்:தங்க பதக்கங்கள் மற்றும் நாணயங்கள் ஏற்றுமதி, 5.92 சதவீதம் குறைந்து, 2,490 கோடியிலிருந்து, 2,343 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. வெள்ளி ஏற்றுமதி, 53 சதவீதம் வளர்ச்சிகண்டு, 277 கோடி ரூபாயிலிருந்து, 424 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.முத்துக்கள் ஏற்றுமதி, 2 கோடியிலிருந்து, 47 லட்சம் ரூபாயாக குறைந்துள்ளது. கச்சா வைரம் ஏற்றுமதி, 19.65 சதவீதம் உயர்ந்து, 787 கோடி ரூபாயிலிருந்து, 941 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)