தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைவு ... ஏலக்காய் விலை வீழ்ச்சிகவுதமாலா காரணமா? ஏலக்காய் விலை வீழ்ச்சிகவுதமாலா காரணமா? ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
பெட்ரோல் இன்ஜின்களில் கார்ப்பரேட்டரின் செயல்பாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 பிப்
2013
14:46

வாகனங்களில் இன்ஜினின் வேலை, எரிபொருளை எரித்து அழுத்தத்தை ஏற்படுத்தி, அந்த அழுத்தத்தை அசைவாக மாற்றி வண்டியை ஓடச் செய்வதாகும். இன்ஜினில் பல பாகங்கள் சேர்ந்து இந்த வேலையை செய்ய உதவுகிறது. அதில் ஒன்று தான் கார்பரேட்டர். ஒரு சிறு துளி பெட்ரோல் (10மில்லி) ஒரு சிறு நெருப்புப் பொறியால் எரிக்கப்பட்டு ஒரு சிறு அளவு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு முறையும் இவ்வாறு தொடர்ந்து நடக்கும் நிகழ்வே இன்ஜினின் இயக்கத்திற்கு காரணம். இதில் சரியான அளவு பெட்ரோலை ஒவ்வொரு முறையும் காற்றோடு கலப்பதே கார்பரேட்டரின் வேலையாகும். இதே வேலையை டீசல் இன்ஜினில் செய்வது பியூவல் பம்ப் ஆகும். போதுமான எரிபொருள் இல்லாமல் இன்ஜின் ஓடினால் இன்ஜின் பழுதடைவது உறுதி. அதிகமான அளவு எரிபொருள் அனுப்பப்பட்டால் எரிபொருள் வீணாவது, அதிகமாக அடைத்துக் கொண்டு வண்டி ஓடாமல் நின்றுவிடுவது, அதிக புகையை கக்குவது, இடித்து, இடித்து ஓடுவது போன்றவை ஏற்படும். இதெல்லாம் ஏற்படாமல் சரியான அளவு எரிபொருளை செலுத்துவதே கார்பரேட்டரின் வேலையாகும்.
இன்றைய நவீன கார்களில் பியூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் இவ்வேலையை எலக்ட்ரானிகல் உதவியுடன் துல்லியமாக செய்துவிடுகிறது. ஆனால் பல பழைய மாடல் கார்களிலும், மோட்டார் பைக்குகளிலும் கார்பரேட்டரே இவ்வேலையை செய்கிறது. கார்பரேட்டர் என்பது ஒரு குழாய் போன்றதே. இதன் நடுமையத்தில் இருக்கும் திராட்டல் பிளேட் எவ்வளவு காற்று இந்த குழாய்குள் நுழையலாம் என்பதை நிர்ணயிக்கிறது. இந்த குழாயின் ஒரு பாகம் மிகவும் குறுகலாக இருக்கும்.இப்பகுதிதான் "வென்”ரி' ஆகும். இங்குதான் வெற்றிடம் (வேக்யூம்) உருவாக்கப்படுகிறது. இந்த குறுகலான பகுதியில் ஒரு ஓட்டை இருக்கும்.இதுவே "ஜெட்' என்றழைக்கப்படுகிறது. இந்த ஜெட் தான் வெற்றிடத்தின் மூலம் எரிபொருளை உறிஞ்சுகிறது. வண்டியை ஸ்டார்ட் செய்வது புல் திராட்டல் கொடுக்கும்போது திராட்டல் ப்ளேட் முழு அளவு காற்றை கார்பரேட்டரில் செலுத்துகிறது. இக்காற்று வென்சுரியில் வெற்றிடத்தை ஏற்படுத்தி ஜெட் (மெயின்ஜெட்) மூலம் எரிபொருளை உறிஞ்சுகிறது.
இதுவே இன்ஜின் "ஜட்லிங்'கில் இருக்கும்போது திராட்டல் பிளேட் மூடிய நிலையில் இருக்கும். அப்பொழுது காற்று குழாயினுள் நுழையாது. ஆனால் திரோட்டல் பிளேட்டின் பின்புறம் அதிக வெற்றிடம் ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஏனென்றால் காற்றை உள்ளே அனுப்பாமல் நிறுத்தி வைப்பதால் இந்நிலையில் திரோட்டல் பிளேட்டின் பின்புறம் சிறு துளை போடப்பட்டிருக்கும். இந்த துளையின் வழியே வெற்றிடத்தின் உதவியால் எரிபொருள் உள்ளே உறிஞ்சப்படும். இத் துளையே "ஐடல் ஜெட்' என்று அழைக்கப்படுகிறது. மெயின்ஜெட்டிற்குள்ளும், ஐடல் ஜெட்டிற்குள்ளும் நுழையக்கூடிய எரிபொருளின் அளவை நிர்ணயிக்க இரண்டு ஸ்க்ரூக்கள் முறையே "ஹை', "லோ' என்று இருக்கும். "நீடில் வேல்வ்' கொண்ட இந்த ஸ்க்ரூக்களில் "ஹை' ஸ்க்ரூ மெயின் ஜெட்டின் எரிபொருள் அளவையும் "லோ' ஸ்க்ரூ ஐடல் ஜெட்டின் எரிபொருள் அளவையும் நிர்ணயிக்கிறது. இந்த ஸ்க்ரூவை "அட்ஜஸ்ட் செய்வதின் மூலம் ஜெட்டிற்குள் ‌செல்லும் எரிபொருளின் அளவை நாம் தேவைக்கேற்ப வைத்துக் கொள்ளலாம். இதுவே கார்பரேட்டர் ட்யூனில் ஆகும்.
குளிர்காலங்கள், மழைக்காலங்களில் இன்ஜின் குளிர்ந்து இருக்கும்போது வண்டியை ஸ்டாட் செய்வது இன்ஜின் ஜட்லிங்கில் இருக்கும்போது அதிகளவு காற்றும் எரிபொருளும் தேவைப்படும். அம்மாதிரி சமயங்களில் "சோக்' என்றழைக்கப்படும் தகடு (பிளேட்) வென்சுரியை முழுவதுமாய் மூடிவிடும். அப்பொழுது த்ராட்டல் முழுவதுமாய் கொடுக்கப்படும்போது இன்ஜின் அதிகளவு காற்றையும் எரிபொருளையும் உறிஞ்சிவிடும், இதனால் இன்ஜின் உடனடியாக பயர் ஆகி ஓட ஆரம்பித்துவிடும். அதன் பிறகு ‌சோக் பிளேட்டை திறந்து விடலாம். இதில் மெயின் ஜெட்டில் அடைப்பு ஏற்பட்டாலும், கார்பரேட்டர் குழாயில் அழுக்கு சேர்ந்து அடைப்பு ஏற்பட்டாலோ, திராட்டல் பிளேட் உடைந்தாலோ, திராட்டல் பிளேட் கேபிள் அறுந்தாலோ கார்ப்ரேட்டரின் செயல்பாடு பழுதடையலாம். எனவே கார்பரேட்டரின் பாகங்கள் சரிவர இருக்கிறதா என்பதையும் நாம் கவனிக்கவோ, மெக்கானிக்கிடம் கேட்டுத் தெரிந்துக் கொள்வதும் அவசியம். வண்டி திடீரென்று நின்று விட்டாலோ, ஸ்டார்ட் ஆகவில்லையென்றாலோ, அதிக எரிபொருள் ‌செலவானாலோ கார்ப்ரேட்டரில் பிரச்னை இருக்கலாம் என்பதையும், கார்பரேட்டரை டியூனிங் செய்ய ்வண்டும் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)