மாத வருவாய்க்கான பரஸ்பர திட்டங்களில் முதலீடு குறைந்ததுமாத வருவாய்க்கான பரஸ்பர திட்டங்களில் முதலீடு குறைந்தது ... இந்தியாவில் விமான சேவை: ஏர் ஏசியா ரூ.225 கோடி முதலீடு:டாட்டா குழுமத்துடன் களமிறங்குகிறது இந்தியாவில் விமான சேவை: ஏர் ஏசியா ரூ.225 கோடி முதலீடு:டாட்டா குழுமத்துடன் ... ...
ஆபரண தங்கம் விலைகிராமுக்கு ரூ.47 சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 பிப்
2013
01:05

சென்னை:நேற்று ஒரே நாளில், ஆபரணத் தங்கத்தின் விலை, கிராமுக்கு, 47 ரூபாய் சரிவடைந்து, 2,743 ரூபாய்க்கு விற்பனையானது.புத்தாண்டு துவங்கியதில் இருந்து, அதிக ஏற்ற, இறக்கமின்றி காணப்பட்ட தங்கத்தின் விலை, சென்ற வாரம் முதல் தொடர்ந்து சரிவடைந்து வருகிறது.

நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,790 ரூபாய்க்கும், ஒரு சவரன், 22,320 ரூபாய்க்கும் விற்பனையாகின. 24 காரட், 10 கிராம் சுத்த தங்கம், 29,840 ரூபாய்க்கு விற்பனையானது.இந்நிலையில், நேற்று ஒரே நாளில், தங்கத்தின் விலை கிராமுக்கு, 47 ரூபாய் குறைந்து, 21,944 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 376 ரூபாய் சரிவடைந்து, 21,944 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.10 கிராம் சுத்த தங்கத்தின் விலை, 505 ரூபாய் வீழ்ச்சி கண்டு, 29,335 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு கிராம் வெள்ளியின் விலை, 1.70 ரூபாய் குறைந்து,

59.30 ரூபாயிலிருந்து, 57.60 ரூபாய்க்கு விற்பனையானது.கடந்த, 1ம் தேதி, ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,848 ரூபாய்க்கும், ஒரு சவரன், 22,784 ரூபாய்க்கும் விற்பனையாகின. ஆக, நேற்றுடன் நிறைவடைந்த, 20 நாட்களில், தங்கம் விலை கிராமுக்கு, 105 ரூபாயும், சவரனுக்கு, 840 ரூபாயும் குறைந்துள்ளது, என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:கடந்த, 10 ஆண்டுகளாக, தங்கத்தின் விலை, அபரிமிதமான வளர்ச்சி கண்டுள்ளது. இது, ஒரு கட்டத்தில், திடீர் சரிவுக்கு வித்திடும் என்ற அச்சம், முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவுகிறது.இதனால், சர்வதேச சந்தைகளில், தங்கத்தில் முதலீடு செய்வதை, முதலீட்டாளர்கள் குறைத்து வருகின்றனர். இதனால், தங்கத்தின் விலை சரிவடைந்து வருகிறது. இந்த விலை குறைவு, மேலும், சில மாதங்களுக்கு நீடிக்கும்.இவ்வாறு, சலானி கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)