பதிவு செய்த நாள்
22 பிப்2013
01:10

மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம், வியாழக்கிழமையன்று, மிகவும் மோசமாக இருந்தது. சர்வதேச அளவில், வர்த்தகம் சுணக்கம் கண்டதையடுத்து, மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "சென்செக்ஸ்', கடந்த, 10 மாதங்களில் இல்லாத அளவிற்கு, 1.62 சதவீத சரிவுடன் முடிவடைந்தது.அமெரிக்க பெடரல் வங்கி, அதன் கடன் பத்திரங்களை திரும்பப் பெறும் திட்டத்தை கைவிடும் என்ற நிலைப்பாட்டால், ஐரோப்பா மற்றும் இந்தியா உள்ளிட்ட, ஆசியப் பங்குச் சந்தைகளில், வர்த்தகம் மிகவும் மந்தமாக இருந்தது.
நேற்றைய வர்த்தகத்தில், உலோகம், வங்கி, ரியல் எஸ்டேட், பொறியியல் உள்ளிட்ட, பல துறைகளைச் சேர்ந்த, நிறுவனப் பங்குகளின் விலை மிகவும் வீழ்ச்சி கண்டன. இருப்பினும், நுகர்வோர் சாதனங்கள் துறையைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு, ஓரளவிற்கு தேவை இருந்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 317.39 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 19,325.36 புள்ளிகளில், நிலை பெற்றது.
வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 19,554.65 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 19,289.70 புள்ளிகள் வரையிலும் சென்றது."சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், கெயில் நிறுவனம் தவிர, ஏனைய, 29 நிறுவனப் பங்குகளின் விலையும் வீழ்ச்சி கண்டது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 90.80 புள்ளிகள் சரிவடைந்து, 5,852.25 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,921.15 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,844.40 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|