பதிவு செய்த நாள்
23 பிப்2013
01:01

புதுடில்லி:வரும், 2014ம் ஆண்டில், நாட்டின் மருந்து பொருட்கள் ஏற்றுமதி, 2,500 கோடி டாலராக (1.37 லட்சம் கோடி ரூபாய்) அதிகரிக்கும் என, மருந்து பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு அமைப்பு (பார்மெக்சில்) மதிப்பிட்டு உள்ளது.மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்திய மருந்து பொருட்களின் விலை குறைவாகவும், தரமாகவும் உள்ளன. இதனால், உலகின் பல நாடுகள், இந்திய மருந்து பொருட்களை அதிகம் விரும்புகின்றன.
இந்தியாவின் மொத்த மருந்து பொருட்கள் ஏற்றுமதியில், அமெரிக்காவின் பங்களிப்பு, 27 சதவீதம் என்ற அளவில் உள்ளது.கடந்த, 2004ம் நிதியாண்டில், 17 ஆயிரம் கோடி ரூபாய் என்ற அளவில் இருந்த, நாட்டின் மருந்து பொருட்கள் ஏற்றுமதி, கடந்த நிதியாண்டில், 63,500 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. இது, நடப்பு நிதியாண்டில், 75 ஆயிரம் கோடி ரூபாயை எட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.பல நாடுகளில், இந்திய மருந்து பொருட்களுக்கு தேவை அதிகரித்துள்ளதால், வரும், 2014ம் ஆண்டில், இவற்றின் ஏற்றுமதி, 2,500 கோடி டாலராக (1.37 லட்சம் கோடி ரூபாய்) அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|