பதிவு செய்த நாள்
23 பிப்2013
01:04

புதுடில்லி:சகாரா குழுமத்தை சேர்ந்த சர்ச்சைக்குரிய இரண்டு நிறுவனங்களுடன், முதலீட்டாளர்கள் எந்தவிதமான பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ள வேண்டாம் என, "செபி' அமைப்பு எச்சரித்துள்ளது.
முறைகேடு:சகாரா இந்தியா ரியல் எஸ்டேட் கார்ப்பரேஷன் மற்றும் சகாரா ஹவுசிங் இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் நிறுவனங்கள், முறைகேடாக முதலீடுகளை திரட்டிய வழக்கில், 24 ஆயிரம் கோடி ரூபாயை, முதலீட்டாளர்களுக்கு திரும்ப வழங்க வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.ஆனால், அதன்படி நடக்காததால், சம்பந்தப்பட்ட இரு நிறுவனங்கள், சகாரா குழும தலைவர் சுப்ரதா ராய் மற்றும் மூன்று இயக்குனர்கள், ஆகியோரின் வங்கிக் கணக்குகள், சொத்துக்கள், இதர முதலீடுகள் ஆகியவற்றை முடக்க, "செபி'க்கு, சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்தது.
இதன்படி, சம்பந்தப்பட்டவர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் உள்ளிட்டவற்றை "செபி' முடக்கியுள்ளது.இதை தொடர்ந்து "செபி' வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:சம்பந்தப்பட்ட இரண்டு நிறுவனங்கள் மற்றும் நான்கு நபர்களுடன் மேற்கொள்ளும் எந்தவொரு பரிவர்த்தனையும், அது அவர்கள் சொந்த பொறுப்பில் செய்து கொள்வதாகும்.எந்தவொரு பரிவர்த்தனையை மேற்கொள்வதற்கு முன், முதலீட்டாளர்களும், பொதுமக்களும், சம்பந்தப்பட்டவர்களின் சொத்துக்கள், டீமேட், வங்கி கணக்குகள் முடக்கம் தொடர்பாக "செபி' பிறப்பித்த உத்தரவை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலீட்டாளர்கள்:இதையடுத்து, முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப வழங்கும் பொறுப்பை "செபி' மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில், முதலீட்டாளர்களுக்கு, 85 சதவீதத் தொகை வழங்கப் பட்டுள்ளதாகவும், மேலும், "செபி'யிடம் ஏற்கனவே, 5,120 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ள தாகவும், சகாரா குழுமம் தெரிவித்துள்ளது. இது, முதலீட்டாளர்களுக்கு அளிக்க வேண்டியதை விட, அதிகம் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|