சகாரா குழுமத்தில் முதலீடு: "செபி' எச்சரிக்கைசகாரா குழுமத்தில் முதலீடு: "செபி' எச்சரிக்கை ... வெங்கடாஜலபதி கடிகாரம் விலை ரூ.27 லட்சம் தான்! வெங்கடாஜலபதி கடிகாரம் விலை ரூ.27 லட்சம் தான்! ...
இந்தியாவின் தங்கம் இறக்குமதி 9 சதவீதம் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 பிப்
2013
01:05

மும்பை:சென்ற 2012ம் ஆண்டில், நாட்டின் தங்கம் இறக்குமதி, 9 சதவீதம் சரிவடைந்து, 860 டன்னாக குறைந்துள்ளது. இது, இதற்கு முந்தைய 2011ம் ஆண்டில், 969 டன்னாக உயர்ந்து காணப்பட்டது என, உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.

நடப்பு கணக்கு பற்றாக்குறையை கட்டுப்படுத்தும் வகையில், மத்திய அரசு, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாட்டின் மொத்த இறக்குமதி செலவினத்தில், கச்சா எண்ணெய்க்கு அடுத்தபடியாக, தங்கம் இரண்டாவது இடத்தில் உள்ளது.சுங்கவரி
எனவே, மத்திய அரசு, தங்கம் இறக்குமதியை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், சுங்க வரியை அதிகரித்தது. இதனால், சென்ற ஆண்டில், தங்கம் இறக்குமதி குறைந்து போனது.தங்கம் இறக்குமதி சரிவடைந்து உள்ள நிலையில், இதனை ஈடு செய்யும் விதமாக, சென்ற ஆண்டில், உள்நாட்டில், மறு சுழற்சிக்காக, சந்தைக்கு வந்த பழைய தங்கத்தின் அளவு, இரண்டு மடங்கு அதிகரித்து, 117 டன்னாக உயர்ந்துள்ளது. இது, கடந்த 2011ம் ஆண்டில், 59 டன்னாக இருந்தது.சென்ற ஆண்டில், ஒட்டு மொத்த தங்கம் அளிப்பு, 5 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 1,039 டன்னிலிருந்து, 987 டன்னாக சரிவடைந்துள்ளது. இதில், உள்நாட்டு சுரங்கங்களிலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட, 10 டன்னும் அடங்கும்.தங்க நாணயங்கள், தங்க கட்டிகள், தங்க ஆபரணங்கள் மற்றும் தங்கம் மீதான முதலீடு ஆகிய நடவடிக்கைகளுக்கான, ஒட்டு மொத்த தங்கத்திற்கான தேவை, 12 சதவீதம் சரிவடைந்து, 864 டன்னாக குறைந்துள்ளது.

ஆபரணங்கள்:குறிப்பாக, தங்க ஆபரணங்களுக்கான தேவை, 11 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 618 டன்னிலிருந்து, 552 டன்னாக சரிவடைந்து உள்ளது. இதே போன்று, தங்க கட்டிகள் மற்றும் நாணயங்களுக்கான தேவையும், 15 சதவீதம் சரிவடைந்து, 368 டன்னிலிருந்து, 312 டன்னாக வீழ்ச்சி கண்டுள்ளது.அதேசமயம், சென்ற ஆண்டில், 10 கிராம் தங்கத்தின் விலை, 22 சதவீதம் அதிகரித்து, 28,639 ரூபாயாக உயர்ந்திருந்தது.

இது, இதற்கு முந்தைய 2011ம் ஆண்டில், 23,624 ரூபாயாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகளவில், தங்கம் பயன்பாட்டில், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளன. சென்ற 2012ம் ஆண்டில், சீனாவில், தங்கத்திற்கான தேவை, 812 டன்னிலிருந்து, 817 டன்னாக சற்று அதிகரித்து உள்ளது. இதையடுத்து, இவ்விரு நாடுகளிலுமான தங்கம் விற்பனை, 1,618 டன்னை எட்டியுள்ளது. இது, சர்வதேச தங்கத்திற்கான தேவையில் (3,164 டன்), 53 சதவீதமாகும்.சென்ற ஆண்டு மார்ச் மாதத்தில், மத்திய அரசு, தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்தும் வகையில், சுங்க வரியை இரு மடங்கு அதிகரித்து, 4 சதவீதமாக உயர்த்தியது. இது, சென்ற ஜனவரியில், 6 சதவீதமாக மேலும் உயர்த்தப்பட்டது.இதையடுத்து, இறக்குமதி செய்யப்படும், ஒரு கிலோ தங்கத்தின் விலை, 1.40 லட்சம் ரூபாயிலிருந்து, 2 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது.

தங்கம் பயன்பாடுதங்கம் இறக்குமதி மீதான சுங்க வரி உயர்வால், உள்நாட்டில் தங்கத்தின் விலை, சர்வதேச விலையை காட்டிலும், 7 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனை, ஆபரண தயாரிப்பு நிறுவனங்கள், நுகர்வோர் தலையில் சுமத்தி வருகின்றன என, இத்துறையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலையில், நடப்பு 2013ம் ஆண்டில், நாட்டின் தங்கம் பயன்பாடு, 11 சதவீதம் வளர்ச்சி கண்டு, 965 டன்னாக அதிகரிக்க வாய்ப்புள்ளது என, உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.இதனை எடுத்துக்காட்டும் விதமாக, நடப்பாண்டு ஜனவரி மாதத்தில், இந்தியாவின் தங்கம் இறக்குமதி, 23 சதவீதம் உயர்ந்து, 100 டன்னாக அதிகரித்து உள்ளது. இது, கடந்த, 18 மாதங்களுக்கு பிறகான, மிக அதிகபட்ச இறக்குமதி அளவாகும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)