பதிவு செய்த நாள்
23 பிப்2013
01:07

மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம் வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமையன்று அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், மதியத்திற்கு பிறகான வர்த்தகத்தில், முதலீட்டாளர்கள், லாப நோக்கம் கருதி, பங்குகளை விற்பனை செய்தனர். இதையடுத்து, இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சற்று சரிவுடன் முடிவடைந்தன.ஜெர்மனியின் வர்த்தக நடவடிக்கைகள், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, சிறப்பாக உள்ளது என்ற செய்தியால், ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றம் கண்டது.
இருப்பினும், இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மந்தமாகவே இருந்தது.நேற்றைய வியாபாரத்தில், பொதுத் துறை நிறுவனங்கள், நுகர்பொருட்கள், மோட்டார் வாகனம், உலோகம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. இருப்பினும், ரியல் எஸ்டேட், ஆரோக்கிய பராமரிப்பு, தகவல் தொழில்நுட்பத் துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை இருந்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 8.35 புள்ளிகள் சரிவடைந்து, 19,317.01 புள்ளிகளில் நிலை கொண்டது.
வர்த்தகத்தின் இடையே இதன் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 19,401.75 புள்ளிகள் வரையிலும், குறைந்த பட்சமாக, 19,289.83 புள்ளிகள் வரையிலும் சென்றது."சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், இந்துஸ்தான் யூனிலிவர், கோல் இந்தியா, உள்ளிட்ட, 15 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், பார்தி ஏர்டெல், விப்ரோ, உள்ளிட்ட, 15 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 1.95 புள்ளிகள் குறைந்து, 5,850.30 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,873.80 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,835.80 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|