பதிவு செய்த நாள்
23 பிப்2013
11:04

நாமக்கல் : தமிழகம், கேரள,பிப்.23-வில் முட்டை விலை, 380 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டை விலை நேற்று ஒரே நாளில் ஏழு காசு ஏற்றம் கண்டிருப்பது கோழிப்பண்ணையாளர்களை மகிழ்ச்சியடைச் செய்துள்ளது. நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடந்தது. முட்டை உற்பத்தி, மார்க்கெட் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். அதையடுத்து, 373 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை, 7 காசு ஏற்றம் கண்டு, 380 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டை விலை, இரு நாளில், பத்து காசு வீதம் ஏற்றம் கண்டுள்ளது. முட்டை விலை இதுவரை இல்லாத அளவில் அதிகபட்சமாக, 380 காசு வீதம் விற்பனையாவது கோழிப்பண்ணையாளர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை (காசுகளில்) நிலவரம்: சென்னை, 378, பெங்களூரு, 365, மைசூர் 369, ஹைதராபாத் 351, மும்பை 384, விஜயவாடா 351, கொல்கத்தா 405, பார்வாலா 380, டில்லி 400. இவ்வாறு நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|