பதிவு செய்த நாள்
23 பிப்2013
15:53

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த, ஹோண்டா கார் நிறுவனம், இந்தியாவில், 'ஹோண்டா கார்ஸ் இந்தியா' என்ற பெயரில் செயல்படுகிறது. 2003ம் ஆண்டு, இந்த நிறுவனம், இந்தியாவில், எஸ்.யு.வி., கார் பிரிவில், 'ஹோண்டா சிஆர்-வி' காரை அறிமுகப்படுத்தியது. இந்த கார், வெளிநாட்டில் இருந்து முழுமையாக இறக்குமதி செய்யப்பட்டு, இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டது. இந்த சூழ்நிலையில், டில்லியை ஒட்டி, உ.பி., மாநிலத்தை சேர்ந்த, கிரேட்டர் நொய்டா பகுதியில் செயல்படும், ஹோண்டா தொழிற்சாலையில் அசெம்பள் செய்யப்படும், புதிய, 'ஹோண்டா சிஆர்-வி' காரை, ஹோண்டா நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. நான்கு வேரியன்ட்களில் கிடைக்கும், இந்த காரின் விலை, ரூ.19.95 லட்சத்தில் துவங்கி, ரூ.23.85 லட்சம் வரை உள்ளது. இது, எக்ஸ்ஷோரூம், டில்லி விலை. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 5 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் என, இரண்டு வகைகளிலும் இந்த கார் கிடைக்கும். 2.0 லிட்டர் மற்றும் 2.4 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் என, இரண்டு பிரிவுகளில், இந்த கார் கிடைக்கிறது. இந்த காரில், 6 ஏர்பேக்ஸ் உட்பட, பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் உண்டு.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|