கோவை பூமார்க்கெட்டுக்கு தினசரி வரத்து 40 டன்: விற்பனை ரூ.50 லட்சம்கோவை பூமார்க்கெட்டுக்கு தினசரி வரத்து 40 டன்: விற்பனை ரூ.50 லட்சம் ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.16  உயர்வு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.16 உயர்வு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
உள்ளத்தை கொள்ளைக் கொள்ளும் ரோல்ஸ்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 பிப்
2013
11:21

உணர்வுகளைத் தூண்டி மகிழ்ச்சியை கொடுக்கும் பொருட்கள் பல உண்டு. உலகில் கண்களுக்கு விருந்தளிக்கும் அழகிய வைர ஆபரணம், காதுகளுக்கு விருந்தளிக்கும் கர்நாடக இசை, தொடுவதற்கு இதமான காஞ்சிப்பட்டு என்ற இவையெல்லாம் ஒன்று அல்லது இரண்டு உணர்வுகளைத் தூண்டும். ஆனால் வாழ்க்கையில் சில பொருட்கள் மட்டுமே ஐந்து உணர்வுகளையும் தூண்டி நம் ஆறாம் அறிவையும் திருப்திப்படுத்தக் கூடியவை. இதைக்கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட ஒன்றே "மாடர்ன் மாஸ்டர் பீஸ்' ஆன ரோல்ஸ் ராய்ஸின் கோஸ்ட் சீரிஸ் மற்றும் ஃபான்தம் சீரிஸ் கார்கள் ஆகும்.
சொகுசுக் கார் சந்தையில் ரோல்ஸ் ராய்ஸ் தன்னுடைய தடத்தை வெற்றிகரமாகப் பதித்து 108 வருடங்களாக நீடித்து இருப்பதற்கு காரணம் அதன் நவீன பொறியியல் தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கும், பார்ப்போரை பிரமிக்க வைக்கும் தோற்றமும், சிறந்த செயல்திறனும், எந்த சமரசமும் செய்துக் கொள்ளாத தரமான சொகுசு அம்சங்களுமே என்றால் மிகையல்ல.
கோஸ்ட் சீரிஸ்
அதிநவீன பொறியியல் வல்லமையும் சீரிய தொழில்நுட்பத்தின் சிறப்பும் சேர்ந்து உருவாக்கப்பட்டுள்ள கோஸ்ட், "கோஸ்ட்' என்றும் "கோஸ்ட் எக்ஸ்டன்டட் வீல்பேஸ்' என்றும் 2 மாடல்களில் வருகிறது. 0-100 கிலோமீட்டர் வேகத்தை 4.9 நொடியில் அடைந்தும் மிகவும் நிசப்தமாக நம்மை அதிகபட்ச வேகத்தில் வழுக்கிச் ‌செல்லும் உணர்வோடு கொண்டு செல்வதும், காரின் உட்புறம் வேறொரு உல்லாச உலகத்தில் நாம் இருக்கும் உணர்வை அளிப்பதும் கோஸ்ட்டின் தனிச் சிறப்புகளாகும். 6.6லிட்டர், 12 சிலிண்டர் அமைப்பை (V12) கொண்டு ஒரு ஜோடி டர்போ சார்ஜர் கொண்ட இதன் என்ஜின் 560 ககு பவரை வழங்கி தசைகளுக்கு ஊக்கியாக இருக்கும் ஸ்டீராப்டை போல காரின் அசுர செயல்பாட்டிற்கு காரணமாய் விளங்குகிறது. 560ககு பவர் ஒரு காரணம் என்றால் 700NM டார்க் என்பது என்பது ஓட்டுபவரின் மூளையை ஓரிரு நிமிடம் பிரம்மாண்டத்தில் ஸ்தம்பிக்க வைக்கக் கூடிய செயல்திறனாகும்.
ஃபான்தம் சீரிஸ்
ஃபான்தம் என்ற பெயரில் ரோல்ஸ்ராய்ஸ் வெளியிடும் கார்கள் ஃபான்தம், ஃபான்தம் எக்ஸ்டன்டட் வீல்பேஸ் ஃபான்தம் ட்ராப்ஹெட்கூப், மற்றும் ஃபான்தம் கூப் ஆகும்.
புராதன கலை மற்றும் கைவண்ணம் சற்றும் மாறாமல் அதே நேரம் இன்றைய ரசனைக்கேற்ப நவீன தொழில்நுட்ப அம்சங்களை சரியான கலவையில் கலந்து கொடுக்கப்பட்டுள்ளது. ஃபான்தம் சீரிஸ் கார்களில் கைகளால் செய்யப்படும், 500 தனித்தனி பாகங்கள் இணைக்கப்பட்ட, அலுமினிய ஃப்ரேம் கொண்ட, 100மீட்டர் வெல்ட் கொண்ட, லேசான எடையும் அதிகமான உறுதியும் உடைய, சிறப்பான சஸ்பென்ஷன் டெக்னாலஜியும், மென்மையான பவரை வழங்கக்கூடிய "ஏர் குஷன்' டெக்னாலஜியும் மந்திர கம்பளத்தில் பறக்கும் உணர்வை இதில் பயணிப்பவர்க்கு அளிக்கிறது.
டைரக்ட் இன்ஜெக்ஷன் 12 சிலிண்டர் கொண்ட V12 என்ஜினின் சிறந்த செயல்திறன் கொண்டுள்ளது ஃபான்தம். 70 மைல் வேகத்தில் மணிக்கு என்று சென்று கொண்டிருக்கும் போதும் 90 சதவிகித பவரை சேமிப்பில் கொண்டுள்ளதே இதன் செயல்திறனுக்கு கட்டியம் கூறும். 8 ஸ்பீட் கியர் பாக்சும், குறைந்த கரியமிலவாயு வெளியீடும், எரிபொருள் சிக்கனமும் இதன் என்ஜின் வழங்குகிறது. ஃபான்தம் என்ஜினில் உள்ள தொழில்நுட்ப வல்லமைகள் இதன் உட்புற வெளிப்புற அம்சங்களிலும் பிரதிபலிக்கிறது என்பதை விளக்க வேண்டிய அவசியமில்லை. மோல்டுகளோ, ஒரே மாதிரி வடிவமைக்கப்பட்ட உதிரி பாகங்களோ இணைக்கப்பட்டு இயந்திரங்களால் செய்யப்படுவதில்லை. ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் ஒவ்வொரு காரும் கைகளால் பார்த்து பார்த்து இழைத்து இழைத்து செய்யப்படுகின்றன. ஒரு ஃபான்தம் காரை தயாரிக்க அறுபது கைவினைஞர்களின் கைகளும் அவர்களின் 450 மணி நேர உழைப்பும் தேவைப்படுகிறது. ரோல்ஸ் ராய்ஸின் பி ஸ்போக்' என்ற சேவை ஒவ்வொருவரும் தங்களின் காரை தங்களின் ஆளுமையை, ரசனையை, தேவையை பறைசாற்றும் சின்னமாக உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்பை வழங்குகிறது. நம் டீலரிடம் நம் தேவையைத் தெரிவித்து விட்டால் அதை நிஜமாக்கி நம் கைகளில் ஒப்படைக்க ரோல்ஸ் ராய்ஸ் பொறியாளர்களும் கைவினைஞர்களும் தயாராய் உள்ளனர். வாடிக்கையாளர் தங்களின் பெயரை காரில் பொறித்துக் கொள்ளவும் கூட இதில் வசதியுள்ளது. தங்கள் ரசனைக்கேற்ப வீட்டைக் கட்டிக் கொள்வதைப் போல் காரை தங்கள் விருப்பத்திற்கேற்ப "கான்ஃபிகர்' செய்து தங்களின் தனிப்பட்ட முத்திரையை தங்களின் காரிலும் பதித்துக் கொள்ள இச்சேவை வாய்ப்பளிக்கிறதென்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ரோல்ஸ் ராய்ஸ் சரித்திரம்
1904ஆம் ஆண்டு மே மாதம் சர் ஹென்றி ராய்ஸ் என்ற ஒரு வெற்றிகரமான கார் பொறியாளரும், கார்கள் விற்பனையில் வெற்றிப்பெற்றவரான கேம்பிரிஜ் பல்கலைக்கழக இயந்திர பொறியியல் பட்டதாரியுமான சார்லஸ் ரோல்ஸ் என்பவரும் ஆரம்பித்ததுதான் ரோல்ஸ் ராய்ஸ் லிமிடெட் ஆகும். 1907ஆம் ஆண்டு ரோல்ஸ் ராய்ஸின் முதல் காரான "தி சில்வர் கோஸ்ட்' 14371 மைல் தொடர்ந்து ஓடி உலகின் மிகச் சிறந்த கார் என்ற பெருமையைப் பெற்றது. இந்தக் கார் 7036 சிசி திறன் கொண்ட 40-50 hp பவரும் வழங்கும் என்ஜின் கொண்டதாகும். 1922 ஆம் ஆண்டு "பேபி ரோல்ஸ் ராய்ஸ்' என்ற 20 hp பவர் கொண்ட, 3127 சிசி திறனும் 6 சிலிண்டரும் கொண்ட என்ஜின் இதில் பொருத்தப்பட்டது.
1925 ஆம் ஆண்டு "சில்வர் கோஸ்ட்' "நியூ ஃபான்தம் என்ற மாடலாக மாற்றப்பட்டது. இதுவே பின்பு ஃபான்தம் I என்று அழைக்கப்பட்டது. 1930 ஆம் ஆண்டுகளில் ஃபான்தம் II கார்களும் பின்பு ஃபான்தம் III என்ற ரோல்ஸ் ராய்சின் முதன் ‌V12 என்ஜின் 7340 சிசி திறனுடனும், மேம்படுத்தப்பட்ட பாடி ஸ்டைலுடனும் உருவாக்கப்பட்டது.
1940ஆம் ஆண்டு "சில்வர் டான்' என்ற ஸ்டீல் பாடி கொண்ட, 6 சிலிண்டர் 4257 சிசி "இன்லைன் என்ஜினுடன் வெளிவந்தது. 1950ஆம் ஆண்டுகளில், பிரிட்டிஷ் அரசக்குடும்பம் அதுவரை உபயோகித்து வந்த "டெப்ம்லர்' கார்களை விடுத்து ரோல்ஸ் ராய்ஸை உபயோகிக்கத் தொடங்கியது. ஃபான்தம் IV ராணி எலிசபெத் மற்றும் மன்னர் ட்யூக் ஆஃப் எடின்பெர்க் வாங்கிய காராகும். இம்மாடலில் மொத்தம் 18 கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டன. 1965ஆம் ஆண்டுகளில் ஒமர் ஷெரீஃப், ரெக்ஸ் ஹாரிசன் போன்றோர் ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்கினர். பின்பு பெரும் பணக்காரர்கள் மட்டுமின்றி, புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர்கள், பாப் பாடகர்கள் போன்றோர் வாங்கும் காராக பெயர் பெற்றது. 1980ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் ராணுவ நிறுவனமான "விக்கர்ஸ்' ரோல்ஸ் ராய்ஸ் மோட்டார் லிமிடெட்டை வாங்கி ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் பென்டலி கார்களை உருவாக்கியது. என்ஜின் திறனுக்கு பெயர் பெற்ற ரோல்ஸ் ராய்ஸ் என்ஜின் பொருத்தப்பட்ட கார் லான்ட் ஃஸ்பீட் ரெக்கார்டை மீண்டும் முறியடித்தது.
1990 ஆம் ஆண்டு பிஎம்டபிள்யு குழுமம் ரோல்ஸ் ராய்ஸ் கார் தயாரிப்பு உரிமத்தைப் பெற்றது. இதன் முதல் ரோல்ஸ் ராய்ஸ் மாடல் "சில்வர் செராஃப்' என்ற 5.4லிட்டர் V12, பிஎம்டபிள்யு என்ஜின் கொண்டதாகும். தற்போதைய ரோல்ஸ் ராய்ஸ் தலைமையகமும், தொழிற்சாலையும் சக்சஸ் டவுன்ஸ் என்ற இடத்தில் யுகேயின் குட்வுட்டில் அமைந்துள்ளது. உலகப் புகழ்பெற்ற கட்டுமான வல்லுனர் சர் நிகோலன் க்ரிம்ஷா தலைமையில் 21ம் நூற்றாண்டில் சிறந்த கார்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. ""எந்த விஷயத்தை செய்தாலும் அதில் முழுமையை கொண்டு வாருங்கள். அதற்காக எது சிறந்ததோ அதை உபயோகித்துக் கொள்ளுங்கள். சிறந்தது கிடைக்கவில்லையென்றால் அதை உருவாக்கிக் கொள்ளுங்கள்'' என்ற சர் ஹென்றி ராய்சின் வார்த்தைகளை தாரக மந்திரமாகக் கொண்டு உருவாக்கப்படும் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள், சிறந்ததை மட்டுமே நாடுவோரின் மிகச்சரியான தேர்வு என்றால் மிகையல்ல.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)