பதிவு செய்த நாள்
26 பிப்2013
15:58
ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த பி.எம்.டபிள்யூ., கார் நிறுவனம், இந்தியாவில், பல்வேறு மாடல்களில், சொகுசு கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனம் சார்பில், 2007ம் ஆண்டு ஜனவரியில், "எக்ஸ்1' மாடல் கார் அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை, 5,435 "எக்ஸ்1' கார்கள், இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள, பி.எம்.டபிள்யூ., கார் தொழிற்சாலையில் தான், "எக்ஸ்1' கார், அசெம்பள் செய்யப்படுகிறது. இதற்கு தேவையான, உதிரிபாகங்கள் மட்டும், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. ஏற்கனவே விற்பனையில் உள்ள, "எக்ஸ்1" கார், 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் வசதி கொண்டது. இந்த சூழ்நிலையில், காரின் உட்புறமும், வெளிப்புறமும் பல்வேறு மாறுதல்களை செய்து, மேம்படுத்தப்பட்ட புதிய, "எக்ஸ்1' காரை, பி.எம். டபிள்யூ., நிறுவனம் தற்போது, அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், 2 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் வசதி கொண்டது. மூன்று வேரியன்ட்களில், புதிய, "எக்ஸ்1' கார் கிடைக்கும். இந்த காரின் விலை, ரூ.27.9 லட்சத்தில் துவங்கி, ரூ.32.5 லட்சம் வரை உள்ளது. இது, எக்ஸ்ஷோரூம், டில்லி விலை. ஏற்கனவே விற்பனையில் உள்ள, "எக்ஸ்1' காரை விட, புதிய காரின் விலை, ரூ.40 ஆயிரம் அதிகம்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|