மின் கட்டணம் உயரும்மின் கட்டணம் உயரும் ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.144  உயர்வு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
துடிப்பான இளைஞர்களுக்கு எடுப்பான பைக் பஜாஜ் பல்சர் 200 Nகு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 பிப்
2013
10:51

இந்திய இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஜாம்பவனாக விளங்கும் பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் ப்ராண்ட் இந்திய வாடிக்கையாளர்களின் மனம் கவர்ந்த பைக் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இதில்கடைசியாக அறிமுகப்படுத்தப்பட்ட பல்சர் 200 NS மிகச்சிறந்த பொறியியல் மற்றும் நவீன தொழில்நுட்பச் சிறப்புக்களை உள்ளடக்கிக் கொண்டு, பல இளம் பைக் பிரியர்களின் மனதைக் கொள்ளைக் கொண்டது. மிக அதிகமான வேகத்தில் வெளிப்படும் சிறந்த செயல்திறனும், இதன் நவீன 'ஆயில் கூல் தொழில்நுட்பம் கொண்ட என்ஜினும் இதன் சிறப்புக்கான சில காரணங்களாகும்.
பல்சர் 200 NS இன் மேம்படுத்தப்பட்ட செயல்திறனுக்கு இதன் 'ட்ரிப்பிள்ஸ்பார்க்
டெக்னாலஜி கொண்ட 200 NS சிசி 4 வால்வ் கொண்ட என்ஜினும் இதன் லிக்விட் கூலிங் சிஸ்டமும், 6 ஸ்பீட் கியர் பாக்சும் காரணமாகும். ட்ரிப்பிள் ஸ்பார்க் டெக்னாலஜியால் சிறந்த எரிபொருள் சிக்கனம், மாசுக் கட்டுப்பாடும் கிடைக்கிறது. 4 வால்வ் என்ஜினால் விரைவான த்ராட்டல் ரெஸ்பான்ஸ், சிறந்த பவர் மற்றும் எல்லாவித ஸ்பீட்களிலும் சிறந்த பிக்அப் கிடைக்கிறது.
லிக்விட் கூலிங் சிஸ்டம் உள்ளதால் என்ஜின் ஆயுள் அதிகரிப்பதுடன், சூடாகாத
குறைந்த ஓசை கொண்ட என்ஜின் செயல்பாடு கிடைக்கிறது. மேலும் இதன் 6 ஸ்பீட் கியர் பாக்ஸ் மூலம் 9500 ஆர்பிஎம்மில் 235 ககு பவரும், 8000ஆர்பிஎம்மில் 18.3 NM டார்க்கும் கிடைப்பதுடன், 0-60 கிலோமீட்டர் வேகத்தை 3.61நொடியிலும், 0-100 கிலோமீட்டர் வேகத்தை 9.83 நொடியிலும் அடைகிறது. அதிகபட்சவேகமாக 136கிலோமீட்டர் மணிக்கு செல்லக்கூடியது பல்சர் 200 NS என்பதும் குறிப்பிடத்தக்கது. பல்சர் 200 NS ஒரு டிஜிட்டல் பைக் என்பதற்கு இதன் சிறப்பு அம்சங்களான டிஜிட்டல் டாஷ்போர்ட்,DTS-1 என்ஜின் தொழில்நுட்பம், முன் மற்றும் பின்புற ட்யூப்லெஸ் டயர் போன்றவைகள் காரணங்
களாகும். இதன் டாஷ்போர்டில் உள்ள டிஜிட்டல் கன்சோல் மிகவும் கவர்ச்சியாக தெரிகிறது. டிஜிட்டல் ஸ்பீடா மீட்டர், ட்ரிப் மீட்டர், ஃப்யூவல் காஜ், ஓடோமீட்டர் போன்றவைகளும், இதன் அனலாக் டேகோமீட்டரும் கூட அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நீண்டதூர பயணமானாலும், குறுகிய தூர பயணமானாலும் வசதியாக அமர்ந்துகொள்ளக்கூடிய வகையில், இதன் ப்ரஸ்டு ஸ்டீல் பெரிமீட்டர் ஃப்ரேமும் பாக்ஸ் ‌செக்ஷன் ஸ்விங் ஆர்மும் சேர்ந்து சொகுசை கொடுக்கிறது.
இதன் பின்புற நைட்ராக்ஸ் மேனோ சஸ்பென்ஷன் அதிர்வற்ற பயணத்தை வழங்குகிறது.
பல்சர் 200 NS இல் உள்ள பின்புற அகலமான டயர் நல்ல ஸ்திரத்தன்மையை அளிக்கிறது. இதன் பெரிய மெட்டல் டிஸ்க் ப்ரேக் சிறப்பான ப்ரேக்கிங்கையும், குறைந்த சென்டர் ஆஃப் க்ராவிட்டி நல்ல உறுதியையும் வழங்குகிறது. எனவே பல்சர் 200 NS பாதுகாப்பான
பயணத்தை வழங்குகிறது உறுதி என்று கூறலாம். பல்சர் 200 NS இன் பின்புறம் சற்றே மேல் நோக்கி தூக்கி இருப்பதால் இது ஸ்போர்ட்ஸ் பைக்குக்கான 'நேக்கட் ஸ்போர்ட்ஸ்' தோற்றத்தை கொடுக்கிறது. இதன் ஃபுட் பெக், ஹேண்ட் க்ரிப் மற்றும் பேக்லிட் சுவிட்ச்களும் சேர்ந்து இதற்கு முரட்டுத்தனமான தோற்றத்தை கொடுக்கிறது. சிறந்த என்ஜின் அதற்கேற்ற கியர்பாக்ஸ், நல்ல த்ராட்டல் ரெஸ்பான்ஸ், ஷார்ப்பான க்ளட்ச் போன்ற செயல்திறன், அகலமான சீட் போன்ற வசதிகள் சைட்ஸ்டான்ட் இன்டிகேட்டர், ட்வின் ட்ரிப் டிஸ்ப்ளே லோ பாட்டரி இன்டிகேஷன் மற்றும் ஷிப்ட்லைட் போன்ற எலக்ட்ரிக்கல்ஸ் நல்ல மைலேஜ் போன்றவற்றுடன் பல்சர் என்ற ப்ராண்ட் எல்லாம் சேர்ந்து பல்சர் 200 NS யை இளைஞர்களின் கனவு பைக்காக உருவாக்கியுள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)