பதிவு செய்த நாள்
28 பிப்2013
10:02

சென்னை: பிராட்பேண்ட் சேவைக்கான கட்டணத்தை, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் உயர்த்தி உள்ளது. இக்கட்டண உயர்வு, நாளை முதல் அமலுக்கு வருகிறது. நாடு முழுவதும், 1.5 கோடி பேர்,"பிராட்பேண்ட்' சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இவர்களில், 1 கோடி பேர் பி.எஸ்.என்.எல்., சேவையை பயன்படுத்துகின்றனர். தமிழக மற்றும் சென்னை தொலைபேசி வட்டத்தில், 9 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். சிறிய, நடுத்தர மற்றும் பெரிய என பல வாடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்ப, திட்டங்களை அறிவித்துள்ளது. இத்திட்டங்களுக்கான கட்டணத்தை, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் சீரமைத்துள்ளது.
மறு சீரமைப்பின் படி, புதிய கட்டண உயர்வு நாளை முதல் அமலாகும் என்று, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, சென்னை தொலைபேசி வட்டம் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: பி.எஸ்.என்.எல்., நிறுவனம், கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. தனியார் தொலைபேசி நிறுவனங்களுடன் போட்டியை சமாளிக்க, கட்டண சீரமைப்பு அவசியமாகிறது. புதிய கட்டண உயர்வு, நாளை முதல் அமலுக்கு வருகிறது. மாத சந்தா வாடிக்கையாளர்களுக்கு, இப்புதிய கட்டண உயர்வு, உடனே அமலாகிறது. ஏற்கனவே, பிராட்பேண்ட் சேவையை பெற, ஓராண்டு, இரண்டாண்டு மற்றும் மூன்று ஆண்டு சந்தா செலுத்திய வாடிக்கையாளர்களுக்கு, அவர்களின் காலக்கெடு முடிந்த பின்னரே, கட்டண மறு சீரமைப்பு அமலாகும். கட்டண உயர்வை, வாடிக்கையாளர்களுக்கு, குறுஞ்செய்தியில் தெரிவித்து வருகிறோம். விரிவான கட்டண விவரங்களை, சென்னை தொலைபேசியின் இணையதளத்தில் அறியலாம். இவ்வாறு அவர் கூறினார்.
கட்டண உயர்வு எவ்வளவு?
திட்டத்தின் பெயர் பழைய கட்டணம் புதிய கட்டணம்
பி.பி.ஹோம் யு.எல்.டி., 499 499 525
பி.பி.ஹோம் காம்போ யு.எல்.டி., 625 625 650
பி.பி.ஹோம் காம்போ யு.எல்.டி., 750 750 800
பி.பி.ஹோம் யு.எல்.டி., 750 750 800
பி.பி.ஜி. ஹோம் காம்போ யு.எல்.டி., 850 850 900
பி.பி.ஹோம் காம்போ யு.எல்.டி., 900 900 950
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|