பதிவு செய்த நாள்
28 பிப்2013
11:26

புதுடில்லி: 2013 - 2014 ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் உரையை மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் துவக்கினார். உலகப்பொருளாதர வீழ்ச்சி 3.9 சதவீதத்தில் இருந்து 3.2 சதவீதம் குறைந்த போதிலும், இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்படவில்லை.தற்போது இந்தியாவை காட்டிலும் இந்தோனேஷியா வளர்ச்சி அடைந்து வருகிறது. அந்த வகையில் வளர்ச்சி பாதையில் இந்தியா சென்று கொணடிருக்கிறது. பணவீக்கத்தையும்,பற்றாக்குறையையும் கட்டுப்படுத்துவது அவசியமாகிறது. நாட்டின் பொருளாதாரத்தில் 43 சதவீதம் ஏற்றுமதி-இறக்குமதி. உலக பொருளாதார சரிவு இந்தியாவை பாதிக்கவில்லை. மொத்த உள்நாட்டு வளர்ச்சி 8 சதவீதத்தை எட்டி உள்ளது மிகவும் சவாலானது. 8 சதவீத வளர்ச்சி இலக்கை எட்டுவதில் கடும் சவால்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.2010-ம் ஆண்டுக்கு பின்னர் பொருளாதாரத்தில் சிறிது மந்த நிலை ஏற்பட்டது. பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதில் வெற்றி அடைந்துள்ளோம் என்றார். இன்றைய பட்ஜெட்டில் சிதம்பரம் கூறுகையில்: மகளிர் மற்றும் குழந்கைள் முன்னேற்ற திட்டங்களுக்கு தமது அரசில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|