சென்செக்ஸ் 290 புள்ளிகள் சரிவில் முடிந்தது வர்த்தகம்சென்செக்ஸ் 290 புள்ளிகள் சரிவில் முடிந்தது வர்த்தகம் ... நாட்டின் நிதி பற்றாக்குறை 4.8 சதவீதமாக இருக்கும் நாட்டின் நிதி பற்றாக்குறை 4.8 சதவீதமாக இருக்கும் ...
முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி 3.9 சதவீதம் வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 மார்
2013
00:47

புதுடில்லி : நடப்பாண்டின் ஜனவரி மாதத்தில், நாட்டின் முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி வளர்ச்சி, 3.9 சதவீதம் என்ற அளவில் அதிகரித்து உள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில், 2.2 சதவீதம் என்ற அளவில் குறைந்து காணப்பட்டது என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முக்கிய எட்டு துறைகளின் கீழ் நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்கள், உரம், உருக்கு, சிமென்ட், மின்சாரம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.நாட்டின், தொழில் துறை உற்பத்தி குறியீட்டு எண் (ஐ.ஐ.பி.,) கணக்கிடுவதில், இவற்றின் பங்களிப்பு, 37.90 சதவீதம் என்ற அளவில் உள்ளது.
மதிப்பீட்டு காலத்தில் நிலக்கரி, இயற்கை எரிவாயு, உரம், சிமென்ட் ஆகிய துறைகளின் உற்பத்தி குறைந்து உள்ளது. அதேசமயம் கச்சா எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்கள், உருக்கு, மின்சாரம் போன்ற துறைகளின் உற்பத்தி நன்கு இருந்தது.நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான, 10 மாத காலத்தில், முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி, 3.2 சதவீதம் என்ற அளவில் குறைந்த வளர்ச்சி கண்டுள்ளது. இது, சென்ற நிதியாண்டின், இதே காலத்தில், 5 சதவீதமாக உயர்ந்திருந்தது.
சென்ற ஜனவரி மாதத்தில், நிலக்கரிஉற்பத்தி, 2.3 சதவீதம் என்ற அளவில் குறைந்துள்ளது. இது, கடந்தஆண்டின், இதே மாதத்தில், 7.7 சதவீதம் என்றஅளவில் அதிகரித்து காணப் பட்டது.கணக்கீட்டு காலத்தில், கச்சா எண்ணெய் உற்பத்தி, மைனஸ், 2 சதவீதத்தில் இருந்து, 0.2 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. இயற்கை எரிவாயு உற்பத்தி, மைனஸ், 10.4 சதவீதத்தில் இருந்து, மைனஸ், 16.8 சதவீதம் என்ற அளவில் பின்னடைவை கண்டுள்ளது.
சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்களின் உற்பத்தி மைனஸ்4.6 சதவீதத்தில் இருந்து, 10.5 சதவீதம் என்ற அளவில் சிறப்பாக வளர்ச்சி கண்டு உள்ளது. உர துறையின் உற்பத்தி, 4 சத வீதம் என்ற அளவில் இருந்து, மைனஸ், 9.1 சதவீதம் என்ற அளவில் பின்னடைவை கண்டுள்ளது.
உருக்கு துறையின் உற்பத்தி, 4.5 சதவீதத்தில் இருந்து, 9.4 சதவீதம் என்ற அளவில் அதிகரித்து உள்ளது. சிமென்ட் துறையின் உற்பத்தி, 10.9 சதவீதத்தில் இருந்து, மைனஸ், 6.6 சதவீதம் என்ற அளவில் பின்னடைவை கண்டு உள்ளது. மின்சார துறையின் உற்பத்தி, 3.2 சதவீதம் என்ற அளவில் இருந்து, 5.9 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)