பதிவு செய்த நாள்
02 மார்2013
00:30

மும்பை:கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம், சர்வதேச பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.உலகளவில், வலைதளம் வாயிலான பண பரிவர்த்தனைகளுக்கு, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை ஏராளமானோர் பயன்படுத்துகின்றனர்.
இத்தகைய கார்டுதாரர்களின் அனுமதியின்றி, அவர்களின் வங்கிக் கணக்கில் பண மோசடி நடைபெறுவது, அதிகரித்து வருகிறது.குறிப்பாக, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளில் உலகளாவிய பரிவர்த்தனை மேற் கொள்ளும்போது, மோசடி பேர்வழிகள், இடைமறித்து பணத்தை சுருட்டிக் கொள்ளும் புகார்கள் பெருகி வரு கின்றன.
இதையடுத்து, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளில், சர்வதேச பரிவர்த்தனை மேற் கொள்வதற்கான நிதி வரம்பை, வாடிக்கையாளர் ஒப்புதலுடன், வரும் ஜூன் 30ம் தேதிக்குள் வங்கிகள் நிர்ணயிக்க வேண்டும் என, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டு உள்ளது. இப்பணிகள் முடியும்வரை, சர்வதேச பண பரிவர்த்தனை எதுவும் மேற்கொள்ளாத கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு, தலா, 500 டாலருக்கு மிகாமல் நிதி வரம்பை நிர்ணயிக்குமாறும் வங்கிகள் கோரப்பட்டுள்ளன.
கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மோசடிகளை தடுக்க, ரிசர்வ் வங்கி பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகளை மேற் கொண்டு வருகிறது.மோசடி நடைபெறும்போதே, அதை கண்காணித்து தடுப்பதற்கான திட்டமும், அலைபேசியில், வாடிக்கையாளர் குறுந்தகவலை அனுப்பி, வங்கி கணக்கை தற்காலிகமாக முடக்கும் திட்டத்தையும் நடைமுறைபடுத்த வேண்டும் என, வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|