பதிவு செய்த நாள்
02 மார்2013
10:20

சென்னை: இருவார இடைவெளியில், பெட்ரோல் விலை மீண்டும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில், நேற்று நள்ளிரவு முதல், ஒரு லிட்டர் பெட்ரோல், 73.95 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல் விலையை, சராசரியாக, மாதத்திற்கு ஒருமுறை உயர்த்தி வருகின்றன. இம்முறை, இரண்டு வார இடைவெளியில், பெட்ரோல் விலை, மீண்டும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த மாதம், 16ம் தேதி, பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது. அதன்படி, சென்னையில், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, 70.26 ரூபாயில் இருந்து, 72.17 ரூபாயாக உயர்ந்தது. தற்போது, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், மீண்டும் பெட்ரோல் விலை உயர்வை அறிவித்துள்ளன. நேற்று நள்ளிரவு முதல், அமலுக்கு வந்துள்ள விலை உயர்வின்படி, சென்னையில், ஒரு லிட்டர் பெட்ரோல், இனி, 73.95 ரூபாய்க்கு விற்கப்படும். மத்திய பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட மறுநாளே, பெட்ரோல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது, வாகன ஓட்டிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|