பதிவு செய்த நாள்
02 மார்2013
14:01

இன்ஜின் ஆயில் என்பது, மனிதர்களுக்கு ரத்தத்தைப் போன்றது. வாகனத்தின் உள் மற்றும் உராய்வு பாகங்கள் சீராக இயங்குவதற்கு ஆயில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பிட்ட கால இடைவெளிகளில், வாகனங்களில் ஆயில் மாற்ற வேண்டும். ஆயில் மாற்றுவதால், வாகனத்தின் முக்கிய பகுதியாக விளங்கும் இன்ஜின் ஒழுங்காக இயங்கும். வாகனத்தின் அசையும் பாகங்கள், சேதம் அடையாமல் பாதுகாக்கப்படுகிறது. குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆயிலை மாற்றவில்லை என்றால், இன்ஜினில் அழுக்கு, கசடுகள் படிந்து உராய்வு, நகர்வு பாகங்கள் சேதமடையும் அபாயம் உள்ளது. எனவே 4,800 முதல் 8,000 கி.மீ.,க்குள் ஆயிலை மாற்றினால் நல்லது. கனிம எண்ணெய், கலவை எண்ணெய், செயற்கை எண்ணெய் என ஆயிலில் என பல வகைகள் உண்டு. ஆயில் மாற்றும் போது, மெக்கானிக்கிடம் எந்த வகையான ஆயில் மாற்ற வேண்டும் என ஆலோசனை செய்து மாற்றுங்கள்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|