பதிவு செய்த நாள்
07 மார்2013
00:05

சேலம்:தமிழகத்தில், பூண்டு வரத்து அதிகரித்துள்ளதால், அதன் விலை கிலோவுக்கு, 20 ரூபாய் வரை சரிவடைந்துள்ளது.தமிழகத்துக்கு மகாராஷ்டிரா, குஜராத், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து, பூண்டு விற்பனைக்கு வருகிறது. கடந்த ஆண்டு, வட மாநிலங்களில் பூண்டு விளைச்சல் எதிர்பார்த்த அளவில் இல்லாததால், அதன் விலை உயர்ந்தது.
மகாராஷ்டிராவில் இருந்து கடந்த வாரம் வரை, தினந்தோறும், 20 லாரிகளில் பூண்டு வந்து கொண்டு இருந்தது. இது, தற்போது, 50 லாரிகளாக உயர்ந்துள்ளது.இதன் காரணமாக, பூண்டு விலையில் திடீர் சரிவு ஏற்பட்டுள்ளது. முதல் ரக பூண்டு, கிலோ, 70 ரூபாயில் இருந்து, 50 ரூபாயாகவும், இரண்டாம் ரக பூண்டு கிலோ, 60 ரூபாயில் இருந்து, 40 ரூபாயாகவும் குறைந்துள்ளது.
நாட்டு பூண்டு விலையில் சரிவு ஏற்பட்டதை அடுத்து, நீலகிரி பூண்டு விலையும் கிலோவுக்கு, 30 ரூபாய் வரை குறைந்துள்ளது.கடந்த வாரம் வரை, 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ நீலகிரி பூண்டு, தற்போது, 110 ரூபாயாகவும், இரண்டாம் ரகம் 130 ரூபாயில் இருந்து, 90 ரூபாயாகவும் குறைந்துள்ளது.பூண்டு விலை வீழ்ச்சி கண்டுள்ளதால், அதை பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஊறுகாய் தொழிலில், சுறுசுறுப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|