பதிவு செய்த நாள்
07 மார்2013
00:15

புதுடில்லி:நடப்பு 2012-13ம் நிதியாண்டில், அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்று மாதங்களில், கிரெடிட் கார்டு மோசடிகளின் எண்ணிக்கை, 1,590 ஆக அதிகரித்துள்ளது என, நிதி துறை இணை அமைச்சர் நமோ நாராயண் மீனா, ராஜ்யசபாவில் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
ரிசர்வ் வங்கி அளித்த தகவலின்படி, சென்ற டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில், 1,590 கிரெடிட் கார்டு மோசடிகள் நடைபெற்றுள்ளன. இவற்றின் மூலம், 948.65 லட்சம் ரூபாய் அளவிற்கு பண மோசடி நடந்துள்ளது. இது, முந்தைய 2010-11ம் நிதியாண்டின், இதே காலத்தில் நடைபெற்ற கிரெடிட் கார்டு மோசடிகளை விட, எண்ணிக்கையிலும், மதிப்பிலும் அதிகமாகும்.கடந்த 2010-11ம் நிதியாண்டில், டிசம்பர் வரையிலான மூன்றாம் காலாண்டில், 493 கோடி ரூபாய் அளவிலான, 1,327 கிரெடிட் கார்டு மோசடிகள் நடைபெற்றுள்ளன. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|