பதிவு செய்த நாள்
07 மார்2013
00:40

புதுடில்லி:சென்ற, 2011-12ம் நிதிஆண்டில், அதிக அளவில் லாபமீட்டிய பொதுத்துறை நிறுவனங்களில், ஓ.என்.ஜி.சி., தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இழப்பு:இந்த பட்டியலில், அதிக இழப்பை கண்ட நிறுவனங்களில், பீ.எஸ். என்.எல்., முதலிடத்தை பிடித்துள்ளது.மதிப்பீட்டு காலத்தில், ஓ.என்.ஜி.சி., 25,122 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது. இரண்டாவது இடத்தில், என்.டி.பி.சி., நிறுவனம் உள்ளது.
கடந்த, 2010-11ம் நிதிஆண்டில், ஏழாவது இடத்தில் இருந்த, கோல் இந்தியா நிறுவனம், சென்ற நிதியாண்டில், ஐ.ஓ.சி.,யை பின்னுக்கு தள்ளி, மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
நான்காவது இடம்:என்.எம்.டீ.சி., நிறுவனம், நான்காவது இடத்திலும், பீ.எச்.இ.எல்., நிறுவனம் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.அடுத்த இடங்களில், சதர்ன் ஈஸ்டர்ன் கோல்பீல்ட்ஸ், மகாநதி கோல்பீல்ட்ஸ், கெயில் (இந்தியா), செயில் ஆகிய நிறுவனங்கள் உள்ளன.சென்ற நிதியாண்டில், அதிக இழப்பை கண்ட பொதுத்துறை நிறுவனங்
களின் பட்டியலில், பீ.எஸ். என்.எல்., முதலிடத்தை பிடித்துள்ளது.
ஏர்-இந்தியா:முந்தைய நிதியாண்டில், முதிலிடத்தில் இருந்த ஏர்-இந்தியா, சென்ற நிதியாண்டில், இழப்பை குறைத்துக் கொண்டு, இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. அடுத்த இடங்களில், எம்.டி.என்.எல்., இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ், இந்துஸ்தான் கேபிள்ஸ், ஏர்-இந்தியா சார்ட்டர்ஸ், பெர்டிலைசர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா ஆகிய நிறுவனங்கள் உள்ளன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|