பதிவு செய்த நாள்
07 மார்2013
09:19

மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் நான்காம் நாளான இன்று ஏற்ற இறக்கத்துடன் தொடங்கியது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் (09.05 மணியளவில்) போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 24.61 புள்ளிகள் அதிகரித்து 19277.22 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 42.15 புள்ளிகள் குறைந்து 5776.45 புள்ளிகளோடு காணப் பட்டது. நாட்டின் பங்கு வியாபாரம் நேற்று நன்கு இருந்தது. சர்வதேச நிலவரங்கள் சாதகமாக இருந்ததால், சில்லரை முதலீட்டாளர்கள், அதிகளவில் பங்குகளை வாங்கினர். இதையடுத்து, இந்திய பங்குச் சந்தைளில், வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தது. அமெரிக்காவில் சேவை துறை வளர்ச்சி மேம்பட்டுள்ளது என்ற செய்தியால், இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம், கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, அதிகரித்து காணப்பட்டது. மேலும், ஐரோப்பிய சந்தைகளிலும் பங்கு வியாபாரம், கடந்த, நான்கரை ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, உயர்வுடன் முடிவடைந்தது. நேற்றைய வர்த்தகத்தில், ரியல் எஸ்டேட், பொறியியல், உலோகம், தகவல் தொழில் நுட்ப துறைகளைச் சேர்ந்த, நிறுவனப் பங்குகள், அதிக விலைக்கு கைமாறின. இருப்பினும், நுகர் பொருட்கள், நுகர்வோர் சாதனங்கள் துறைகளைச் சேர்ந்த, நிறுவனப் பங்குகளுக்கு தேவை குறைந்து காணப்பட்டது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|