பதிவு செய்த நாள்
07 மார்2013
14:13

கார் வாங்குவதை விட, அதை ஓட்டும்போது தான் கவனமாக இருக்க வேண்டும். பொதுவாக வாகனங்களை ஓட்டுவதற்கு, தைரியம் முக்கியம். பயமில்லமால் இருந்தால், வாகனம் ஓட்டுவதை எளிதில் கற்றுக்கொள்ளலாம். பைக், கார் எதுவாக இருந்தாலும் கியர் மாற்றுவதை சரியாக பழகிக் கொண்டாலே, 90 சதவீதம் வண்டி ஓட்டுவதில் நீங்கள் கில்லாடி தான். வேகத்துக்கு ஏற்ப கியர் மாற்றுவதை பற்றி தெரிந்து கொண்டால், எரிபொருளையும் சேமிக்கலாம். பணத்தையும் மிச்சப்படுத்தலாம். காரும் எவ்வித சிக்கலுமின்றி செல்லும். மேலும் சரியாக கியரை இயக்குவதன் மூலம் கியர் பாக்ஸ் மற்றும் இன்ஜினின் வாழ்நாளையும் அதிகரிக்கலாம். கைகளால் கியர்களை மாற்றும் வகையில் உள்ள கார்களில், முதல் கியர் போட்டவுடன் 10 கி.மீ., முதல் 15 கி.மீ., வேகம் செல்லும் வரை இரண்டாவது கியரை போட வேண்டாம், 15 கி.மீ., வேகத்துக்குப்பின் 2வது கியரை மாற்றலாம். வளைவுகளில் செல்லும் போது இரண்டாவது கியரையே பயன்படுத்தலாம். வேகம் அதிகரித்த பின் அடுத்தடுத்த கியர்களை மாற்றலாம். ரிவர்ஸ் கியரை மாற்றும் போது "கிளட்ச்' மற்றும் "ஆக்சிலேட்டரை' சரியான அளவில் கவனமாக கொடுக்க வேண்டும். கியரை சரியாக பயன்படுத்த தெரிந்து கொண்டாலே, கார் ஓட்டுவதில் நீங்கள் தேர்ச்சி பெற்றவர்களாகி விடுவீர்கள்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|