பதிவு செய்த நாள்
08 மார்2013
00:07

புதுடில்லி:கடந்த 2012ம் ஆண்டில், நாட்டின், அலைபேசி சாதனங்கள் விற்பனை, 16 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளதாக, தனியார் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டில், அலைபேசி பயன்பாடு சிறப்பான அளவில் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, பல முன்னணி நிறுவனங்கள், வாடிக்கையாளர் விரும்பும் வகையில், நவீன தொழில்நுட்பத்துடன், அதிவேகமாக செயல்படக் கூடிய, புதிய அலைபேசி சாதனங்களை அறிமுகம் செய்து வருகின்றன.கடந்த 2012ம் ஆண்டில், அலைபேசி விற்பனை, 21.80 கோடியாக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய, 2011ம் ஆண்டில், மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, 16 சதவீதம் அதிகமாகும்.
மதிப்பீட்டு காலத்தில், ஸ்மார்ட் போன் விற்பனை, 48 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1.10 கோடி என்ற எண்ணிக்கையில் இருந்து, 1.63 கோடியாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. நடப்பாண்டில், இதன் விற்பனை, 70 சதவீதம் வளர்ச்சி காணும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|