பதிவு செய்த நாள்
08 மார்2013
00:12

புதுடில்லி:வெளிநாடுகளில் இருந்து, மலிவு விலை ஏலக்காய் வருவதை தடுக்க, அதற்கு குறைந்தபட்ச இறக்குமதி விலையை நிர்ணயம் செய்வது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
கவுதமாலா, பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து, விலை குறைந்த ஏலக்காய், அதிக அளவில்இறக்குமதியாகி வருகிறது.இத்துடன், வெளிநாடுகளில் இருந்து, சட்டத்திற்கு புறம்பான வகையில் ஏலக்காய் கடத்தி வரப்படுகிறது. இதனால், உள்நாட்டில் இதன் விலை வீழ்ச்சி கண்டுள்ளது.
இதையடுத்து, ஏலக்காய் கடத்தலை தடுக்கவும், மலிவு விலையில் இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்தவும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் மற்றும் வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அதே சமயம், ஏலக்காய் விலை, குறிப்பிடத்தக்க அளவிற்கு ஒன்றும் குறையவில்லை என, நறுமணப் பொருள்கள் வாரியம் தெரிவித்து உள்ளது.
சென்ற ஆண்டு, பிற்பகுதியில் இருந்து தான், ஏலக்காய் இறக்குமதி சூடுபிடித்துள்ளது. கடந்த ஒன்பது மாதங்களில், ஏலக்காய் இறக்குமதி, 200 டன் என்ற அளவிற்கே உள்ளது. ஏல மையங்களில், ஒரு கிலோ ஏலக்காய் விலை, சராசரியாக, 696 - 787 ரூபாய் என்ற அளவிற்கே ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுவதாக, வாரியத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்நிலையில், மலிவு விலை ஏலக்காய் வரத்தை குறைக்க, அதற்கு, குறைந்தபட்ச இறக்குமதி விலையை நிர்ணயிப்பது குறித்து, மத்திய வர்த்தக அமைச்சகம் ஆலோசித்து வருகிறது.இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால், மலிவு விலை ஏலக்காய் வரத்து கட்டுப்படுத்தப்பட்டு, உள்நாட்டில் அதன் விலை, நிலையாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|